என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை பணியில் ஈடுபட்ட பயிற்சிப் பள்ளி காவலர்கள்"

    • செடி, கொடிகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
    • இதற்கான ஏற்பாடுகளை களர்பதி அரசு உயர்நிலைப் பள்ளி தலையாசிரியர் நெப்போலியன் செய்திருந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள களர் பதி அரசு உயர்நிலைப் பள்ளி யில் போச்சம்பள்ளி 7-ம் அணி காவலர் பயிற்சிப் பள்ளியின் காமாண்டர் பாண்டியராஜன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் செல்வதுரை தலையிலும், உதவி காவல் ஆய்வாளர் சுகவனம் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட 7-ம் அணி பயிற்சிப் பள்ளி காவலர்கள் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் உள்ள அடர்ந்த முட்புதர்கள், செடி, கொடிகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை களர்பதி அரசு உயர்நிலைப் பள்ளி தலையாசிரியர் நெப்போலியன் செய்திருந்தார்.

    ×