என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பல்லக்கு கோவிலைச் சுற்றிலும் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 108 குத்துவிளக்கு பூஜையும் நடந்தன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகில் உள்ள பில்லனகுப்பம் சாய்நகரில் அமைந்துள்ள சீரடி குழந்தை சாய்பாபா கோவிலில், குருபூர்ணிமா விழா நேற்று நடந்தது.

    இதையொட்டி நேற்று காலை 5 மணிக்கு கணபதி பூஜை, கோமாதா பூஜையும் நடந்தது. காலை 8.30 மணிக்கு 108 சாய்பாபாவிற்கு லட்சார்சனையும், 108 குத்துவிளக்கு பூஜையும் நடந்தன.

    பகல் 12 மணிக்கு மதிய ஆர்த்தி, உலகம் செழிக்க கூட்டு பிரார்த்தனை நடந்தது. மதியம் 2 மணிக்கு பல்லக்கு கோவிலைச் சுற்றிலும் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், சாய்பாபா, பெருமாள், கிருஷ்ணன், விநாயகர் உள்பட பல்வேறு சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 என மூன்று பிரிவுகளில் இப்போட்டிகள் நடக்கிறது.
    • வெற்றி பெறுபவர்கள் வரும் 25-ந் தேதி நடக்கும் மாவட்ட அளவிலான செஸ் போட்டியிலும் கலந்து கொள்ள உள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்ம மகேஸ்வரி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    செஸ் போட்டிகள் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், 9, 10-ம் வகுப்பும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 என மூன்று பிரிவுகளில் இப்போட்டிகள் நடக்கிறது. இதில், 325 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் சைமன் ஜார்ஜ், ரமேஷ்பாபு, காசிராஜன், அல்போன்ஸ் ஆல்பர்ட் மற்றும் சிதம்பரம் ஆகியோர் செயல்பட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன், பள்ளியின் தலைமை ஆசிரியர் சேரலாதன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, பள்ளித் துணை ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் முதல இரண்டு இடங்களில் வெற்றி பெறுபவர்கள் வரும் 20-ந் தேதி நடக்கும் வட்டார அளவிலான செஸ் போட்டியிலும், வட்டார அளவிலான போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்கள் வரும் 25-ந் தேதி நடக்கும் மாவட்ட அளவிலான செஸ் போட்டியிலும் கலந்து கொள்ள உள்ளனர். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் 6, 7, 8&ம் வகுப்பு மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் பயிற்சி மற்றும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    இப்போட்டிகளில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் கலந்து கொள்கின்றனர்.

    • வினோத்குமாருக்கும், புனிதாவிற்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புனிதா தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கெங்கபிராம்பட்டி கிரா மத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 60). இவரது மனைவி லட்சுமி. உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவர்களின் மகன் வினோத்குமார் (27). இவருக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பு பாண்டவர் நகர் கிராமத்தில் இருந்து புனிதா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

    இந்த நிலையில் வினோத்குமாருக்கும், புனிதாவிற்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புனிதா தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த தந்தை மற்றும் மகன் நேற்று அதிகாலையில் தங்களுடைய மாடி வீட்டில் தூக்கில் தொங்கினார்கள்.

    இதில் ராஜா சம்பவ இடத்தில் இறந்து விட்டார். உயிருக்கு போராடிய வினோத்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இவர்களுக்கு சொந்தமாக சுமார் 15 ஏக்கர் நிலமும் நூற்றுக்கணக்கான தென்னை மரங்களும் உள்ளன. குடும்ப பிரச்சினை காரணமாக அவர்கள் 2 பேரும் தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மொட்டை மாடியில் மதுமித்ரா செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக மொட்டை மாடியில் இருந்து தவறி அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் உள்ள கட்டிக்கானபள்ளி, பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி வடிவழகி (வயது47). இவர் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மது மித்ரா (17) மகள் உள்ளார். இவர் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் மொட்டை மாடியில் மதுமித்ரா செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மொட்டை மாடியில் இருந்து தவறி அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • வயிற்று வலி குணமடையாததால் விஷம் அருந்தி மயங்கி விழுந்துள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்த மலையாண்ட அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன், இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது47). இவருக்கு தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்தும் வயிற்று வலி குணமடையாததால் கடந்த 13-ந் தேதி விஷம் அருந்தி மயங்கி விழுந்துள்ளார்.

    இவரை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள னர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த மங்கா உள்ளே சென்று பார்த்தார்.
    • பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிய வந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த போக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மங்கா (வயது41). கணவரை இழந்த இவர் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார். இவரது மகன் திருப்தி, (வயது22). இவர் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று பிற்பகல் இருவரும் வேலைக்கு சென்றிருந்த நிலையில், சுமார் 12 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த மங்கா உள்ளே சென்று பார்த்தார்.

    பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிய வந்தது.

    இது குறித்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பைக்கில் வந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
    • 5 கிலோ எடை கொண்ட சந்தன கட்டை இருப்பது தெரியவந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி வழியாக சந்தன மரக்கட்டைகள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அதில் 5 கிலோ எடை கொண்ட சந்தன கட்டை இருப்பது தெரியவந்தது. பைக்கில் வந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள காட்டரசன்பட்டியை சேர்ந்த முருகன் (29), ஜவ்வாதுமலை மேல்பட்டியை சேர்ந்த சிங்காரம் (34) என்பது தெரியவந்தது. ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • சிமெண்ட் சாலை உள்பட பல திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.
    • தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா 7 ஊராட்சிகளில் மாவட்ட ஊராட்சி குழு துணைச் சேர்மன் ஷேக் ரஷீத்தொகுதி நிதியில் இருந்து ரூ.60 லட்சம் மதிப்பில் திட்ட பணிக்கு தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    காமன்தொட்டி ஊராட்சி, திருமலை கவனி கோட்டா மேல்நிலை நீர்தேக்க தொட்டி, சூளகிரி ஊராட்சி சின்னார்குடிநீர் இணைப்பு, எனுசோனை ஊராட்சி கழிவு நீர் கால்வாய், பங்கனஅள்ளி ஊராட்சி உலகம் கழிவு நீர் கால்வாய், கோவில் தடுப்பு சுவர், அயர்நப்பள்ளி ஊராட்ச்சி அலேசீபம் சிமெண்ட் சாலை உள்பட பல திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.

    இதில் சூளகிரி வடக்கு, தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர்கள் நாகேஷ், பாக்கியராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், அருணா பூசன்குமார், கவுன்சிலர் முனிராஜ், பி.டி.ஒ.க்கள் கோபாலகிருஷ்ணன், சிவகுமார், பொறியாளர் சுமதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஷாமில் பாஷா,ஜோதிலட்சுமி திம்ம ராஜ், கிருஷ்ணவேணி மாரிமுத்து, லட்சுமிகாந், தி.மு.க. நிர்வாகிகள் ராமசந்திரன், ராஜேந்திரன், ராமன், கோதான்டன், அன்பு, முருகேசன், மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஜமீல், சுரேஷ், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக ஜான் பிரபாகரன் மீது மோதியது.
    • சிகிச்சை பலனின்றி இன்றுகாலை ஜான்பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார்

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி ஹவுசிங் போடு ஆனந்த நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான் பிரபாகரன் (வயது56). இவர் செக்யூரிட்டி சர்வீஸ் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இவர் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக ஜான் பிரபாகரன் மீது மோதியது.

    இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுகாலை ஜான்பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி மாநில பக்தர்கள் பங்கேற்பு.
    • பல்வேறு துறைகளில் சாதனைப்ப டைத்தவர்களின் உருவங்களை, பழங்கள் மூலம் 100 உருவங்களை வடிவமைத்து காட்சிக்கு வைத்திருந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகில் உள்ள ஒரப்பம் கிராமத்தில், பார்ஸ்வ பத்மாவதி சக்தி பீடம் (ஜெயின் கோயில்) அமைந்துள்ளது.

    இந்த சக்தி பீடம் உலகில் அதிக உயரமுள்ள சிலைகளைக் கொண்ட ஜெயின் கோயிலாக உள்ளது. இக்கோயிலில் நேற்று குரு பவுர்ணமி பூஜை, கிருஷ்ணகிரி சக்திபீடாதிபதி வசந்த் விஜய்ஜி மகாராஜ் தலைமையில் நடந்தன.

    இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மந்திரங்கள் ஓத மதியம் மூலிகை குளியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சைவ உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்முவை கவுரவிக்கும் வகையிலும், சைவ உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், திரவுபதி முர்முவிற்கு 12 அடி உயரத்தில் காய்கறிகள், பழங்களைக் கொண்டு சிலை அமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

    இதே போல், சுதந்திரப் போராட்ட தியாகிகள், தேசத்தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு துறைகளில் சாதனைப்ப டைத்தவர்களின் உருவங்களை, பழங்கள் மூலம் 100 உருவங்களை வடிவமைத்து காட்சிக்கு வைத்திருந்தனர்.

    இதை பா.ஜ., மாநில துணைத் தலைவர் நரேந்திரன், சக்திபீடாதிபதி வசந்த் விஜய்ஜி மகாராஜ் தலைமையில் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

    பின்னர், சக்திபீடாதிபதி வசந்த் விஜய்ஜி மகாராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, சைவ உணவு பழக்கம் உள்ளவராக இருப்பதால், அவரை முன்னிறுத்தி இங்கு சைவ உணவு விழிப்புணர்வு பிரச்சாரமும், அவரை ஆதரிக்கும் விதமாக இங்கு பழங்களால் அவரின் உருவமும் வைக்கப்பட்டுள்ளது. குரு பவுர்ணமி விழாவானது, தமிழகத்திலும், இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக வாழ்ந்து நமக்கெல்லாம் அருள் செய்த அனைத்து துறவிகள், ஞானிகள், இளங்கோ வடிகள், திருவள்ளுவர் போன்ற மகான்களை பழங்களில் உருவங்களாக செய்து கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி சைவ உணவு விழிப்புணர்வுக்காவும், பாரத நாட்டிற்கு எல்லா விதமான நலமும் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பார்ஸ்வ பத்மாவதி சேவா டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். இதில் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் கட்டப்பட்டது.
    • பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக அங்குள்ள கடைகளில் சென்று கேட்டு பருகி வருவதாக சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையத்தில் பயணிகளின் குடிநீர் தேவைக்காக 2018 -19 ஆம் ஆண்டு ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் கட்டப்பட்டது.

    குடிநீர் பைப்புகள் அமைக்கப்பட்டும் முழுமையான பணி முடிந்து மூன்று ஆண்டுக்கு மேல் ஆகியும் இந்த சுத்திகிரிக்கப்பட்ட குடிநீர் மையம் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

    இதனால் பேருந்தில் பயணம் செய்ய வரும் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக அங்குள்ள கடைகளில் சென்று கேட்டு பருகி வருவதாக சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.

    இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் பேருந்து நிலையத்திற்கு வரும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்பெறுவர்.

    இவை பயன்பாட்டில் இல்லாத காரணத்தினால் ஏழை எளிய பொதுமக்கள் வெயில் காலங்களிலும் மழைக் காலங்களிலும் குடிநீருக்காக தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்தப் பேருந்து நிலையத்தில் மக்கள் குடிநீர் வசதிக்காக அரசு நிதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த குடிநீர் மையத்தை புதிதாக பொறுப்பேற்ற பேரூராட்சி நிர்வாகம் மக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டு வர வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • உணவுகளுக்கு முறையாக டோக்கன் வழங்காமல் உணவு விற்பனை நடைபெறுவதை கண்டறிந்தார்.
    • உணவுகள் தரமாகவும், சுகாதாரத்துடனும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி சந்தைபேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் நகராட்சி தலைவர் பரிதா நவாப் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அம்மா உணவகத்திற்கு சென்ற அவர் உணவின் தரம் குறித்து அம்மா உணவகத்தில் சாப்பாட்டை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

    மேலும் உணவகத்தில் பணியாற்றுபவர்களின் வருகை பயிவேடுகளையும் ஆய்வு செய்த அவர், உணவுகளுக்கு முறையாக டோக்கன் வழங்காமல் உணவு விற்பனை நடைபெறுவதை கண்டறிந்தார்.

    தொடர்ந்து அம்மா உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கு முறையாக பில் வழங்கப்பட வேண்டும் என்றும், உணவுகள் தரமாகவும், சுகாதாரத்துடனும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனல் சுப்பிரமணி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கோவிந்தராஜ், சரவணன், மேற்பார்வையாளர் சரவணன், ஜான்டேவிட், முனீர் உள்ளிட்டோர் இருந்தனர்.

    ×