என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப தகராறில் தந்தை தற்கொலை:  தற்கொலைக்கு முயன்ற வாலிபர்   ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    X

    குடும்ப தகராறில் தந்தை தற்கொலை: தற்கொலைக்கு முயன்ற வாலிபர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வினோத்குமாருக்கும், புனிதாவிற்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புனிதா தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கெங்கபிராம்பட்டி கிரா மத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 60). இவரது மனைவி லட்சுமி. உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவர்களின் மகன் வினோத்குமார் (27). இவருக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பு பாண்டவர் நகர் கிராமத்தில் இருந்து புனிதா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

    இந்த நிலையில் வினோத்குமாருக்கும், புனிதாவிற்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புனிதா தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த தந்தை மற்றும் மகன் நேற்று அதிகாலையில் தங்களுடைய மாடி வீட்டில் தூக்கில் தொங்கினார்கள்.

    இதில் ராஜா சம்பவ இடத்தில் இறந்து விட்டார். உயிருக்கு போராடிய வினோத்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இவர்களுக்கு சொந்தமாக சுமார் 15 ஏக்கர் நிலமும் நூற்றுக்கணக்கான தென்னை மரங்களும் உள்ளன. குடும்ப பிரச்சினை காரணமாக அவர்கள் 2 பேரும் தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×