என் மலர்
நீங்கள் தேடியது "சாய்பாபா கோவிலில் குருபூர்ணிமா விழா"
- பல்லக்கு கோவிலைச் சுற்றிலும் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 108 குத்துவிளக்கு பூஜையும் நடந்தன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகில் உள்ள பில்லனகுப்பம் சாய்நகரில் அமைந்துள்ள சீரடி குழந்தை சாய்பாபா கோவிலில், குருபூர்ணிமா விழா நேற்று நடந்தது.
இதையொட்டி நேற்று காலை 5 மணிக்கு கணபதி பூஜை, கோமாதா பூஜையும் நடந்தது. காலை 8.30 மணிக்கு 108 சாய்பாபாவிற்கு லட்சார்சனையும், 108 குத்துவிளக்கு பூஜையும் நடந்தன.
பகல் 12 மணிக்கு மதிய ஆர்த்தி, உலகம் செழிக்க கூட்டு பிரார்த்தனை நடந்தது. மதியம் 2 மணிக்கு பல்லக்கு கோவிலைச் சுற்றிலும் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சாய்பாபா, பெருமாள், கிருஷ்ணன், விநாயகர் உள்பட பல்வேறு சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.






