என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்கம்பட்டி கிராமத்தில்   வீட்டின் பூட்டை உடைத்து   நகை, பணம் கொள்ளை
    X

    போக்கம்பட்டி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த மங்கா உள்ளே சென்று பார்த்தார்.
    • பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிய வந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த போக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மங்கா (வயது41). கணவரை இழந்த இவர் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார். இவரது மகன் திருப்தி, (வயது22). இவர் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று பிற்பகல் இருவரும் வேலைக்கு சென்றிருந்த நிலையில், சுமார் 12 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த மங்கா உள்ளே சென்று பார்த்தார்.

    பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிய வந்தது.

    இது குறித்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×