என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளில் ரூ.60 லட்சம் மதிப்பில் திட்டப்பணிக்கு பூமி பூஜை
- சிமெண்ட் சாலை உள்பட பல திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.
- தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா 7 ஊராட்சிகளில் மாவட்ட ஊராட்சி குழு துணைச் சேர்மன் ஷேக் ரஷீத்தொகுதி நிதியில் இருந்து ரூ.60 லட்சம் மதிப்பில் திட்ட பணிக்கு தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
காமன்தொட்டி ஊராட்சி, திருமலை கவனி கோட்டா மேல்நிலை நீர்தேக்க தொட்டி, சூளகிரி ஊராட்சி சின்னார்குடிநீர் இணைப்பு, எனுசோனை ஊராட்சி கழிவு நீர் கால்வாய், பங்கனஅள்ளி ஊராட்சி உலகம் கழிவு நீர் கால்வாய், கோவில் தடுப்பு சுவர், அயர்நப்பள்ளி ஊராட்ச்சி அலேசீபம் சிமெண்ட் சாலை உள்பட பல திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.
இதில் சூளகிரி வடக்கு, தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர்கள் நாகேஷ், பாக்கியராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், அருணா பூசன்குமார், கவுன்சிலர் முனிராஜ், பி.டி.ஒ.க்கள் கோபாலகிருஷ்ணன், சிவகுமார், பொறியாளர் சுமதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஷாமில் பாஷா,ஜோதிலட்சுமி திம்ம ராஜ், கிருஷ்ணவேணி மாரிமுத்து, லட்சுமிகாந், தி.மு.க. நிர்வாகிகள் ராமசந்திரன், ராஜேந்திரன், ராமன், கோதான்டன், அன்பு, முருகேசன், மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஜமீல், சுரேஷ், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.