என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கிருஷ்ணகிரியில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிருஷ்ணகிரி நகரம், தொழிற்பேட்டை, பவர் ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி 1,2, பழையபேட்டை, காட்டிநாயனப்பள்ளி, அரசு ஆண்கள் கலை கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், பெல்லாரம் பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி, தானம் பட்டி, கொண்டேப்பள்ளி, பில்லனகுப்பம், சாமந்த மலை, தளவாய்ப்பள்ளி, நெடு மருதி, கே.திப்பனப் பள்ளி, பி.கொத்தூர், கல்லுகுறுக்கி, மேல்படடி, பூசாரிப்பட்டி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது. 

    • மந்தைவெளி மாரியம்மன் கோவிலுக்கு சென்று திரளான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்து வழிபட்டனர்.
    • வீதிகள் தோறும் நகர் முழுவதும் மாவிலைதோரணங்கள், வேப்பிலை தோரணங்களும் கட்டப் பட்டு மின்விளக்கு களால் நகர் முழுவதும் ஜொலித்தது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள தேர்ப்பேட்டையில் அமைந்துள்ள மந்தைவெளி மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஊர் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தும், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வீதிகள் தோறும் நகர் முழுவதும் மாவிலைதோரணங்கள், வேப்பிலை தோரணங்களும் கட்டப் பட்டு மின்விளக்கு களால் நகர் முழுவதும் ஜொலித்தது.

    மந்தைவெளி மாரியம்மன் கோவிலுக்கு சென்று திரளான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்து வழிபட்டனர். பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர் . அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் ஒரு வாரம் கையில் மஞ்சள் காப்பு கட்டி விரதமிருந்து ஆண்களும், பெண்களும், முதுகில் அலகு குத்திக் கொண்டு அதில் கயிறு கட்டி டெம்போ, ஆட்டோ, கார் உருளைகல் ஆகியவற்றை இழுத்து கொண்டு சென்றனர். ஆடு ,கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செய்தனர்.

    அதேபோல் நகரில் அமைந்திருக்கும் பட்டாளம்மன், கங்கையம்மன, உத்தண்டி மாரியம்மன், சேலத்து மாரியம்மன், ஓம் சக்தி அம்மன் ஆகிய கோயில்களுக்கு பெண்கள் மாவிளக்குடன் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    முன்னதாக நேற்று இரவு பூக்கரகத்துடன் பெண்கள் தீச்சட்டி ஏந்தி மேளத்தாளத்துடன் அலகு குத்து கொண்டு ஊர்வலமாக சென்று தீக்குண்டம் இறங்கி தீ மிதித்து நேர்த்திகடன் செய்தனர்.

    இந்த திருவிழாவை காண தேன்கனிகோட்டை சுற்றுபுற பக்தர்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் கலந்துகொண்டு வழிப்பட்டனர்.  

    • ஓசூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.
    • இதனை மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா பார்வையிட்டார்.

    ஓசூர், 

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஓசூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.

    இதனை மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • எம்.பி. டாக்டர் செந்தில் குமார், இந்து மதம் மற்றும் தமிழர்களின் சடங்குகளை கீழ்த்தரமாக பேசியதற்கு கண்டனம்.
    • பா.ஜ.க. சார்பில் நேற்று ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர்,

    தருமபுரி தொகுதி தி.மு.க. எம்.பி. டாக்டர் செந்தில் குமார், இந்து மதம் மற்றும் தமிழர்களின் சடங்குகளை கீழ்த்தரமாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் நேற்று ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ராம்நகர் கோட்டை மாரியம்மன் கோவில் நுழைவுவாயில் அருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, கட்சியின் ஆன்மீகம் மற்றும் ஆலயமேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ஓம் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட பா.ஜ.க.தலைவர் நாகராஜ் கண்டன உரையாற்றினார். இதில், மாநில, மாவட்ட, மண்டல, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்ட முடிவில், திடீரென செந்தில்குமாரின் உருவப்படத்தை கீழே வீசி கால்களால் மிதித்தும், காலணியால் அடித்தும் அவமரியாதை செய்தனர்.

    அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார், செந்தில் குமாரின் உருவப்படத்தை, பா.ஜ.க.வினரிடமிருந்து கைப்பற்றினர். அப்போது, போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மணிகண்டன், சின்னசாமியை தாக்கி காயப்படுத்தியதுடன் கத்தியை காட்டி மிரட்டி கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீஸ் சரகம் ராம்நகரை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 70). கூலி தொழிலாளி.

    இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 30). நில தகராறு தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இதன் எதிரொலியாக மணிகண்டன், சின்னசாமியை தாக்கி காயப்படுத்தியதுடன் கத்தியை காட்டி மிரட்டி கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

    இதில் காயமடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சின்னசாமி தந்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    • சம்பவத்தன்று ஜெயந்தியை பாம்பு கடித்துவிட்டது.
    • அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள இஞ்சிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன். விவசாயி. இவரது மனைவி ஜெயந்தி (வயது 44). சம்பவத்தன்று ஜெயந்தியை பாம்பு கடித்துவிட்டது. அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து சரவணன் தந்த புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பீரோவில் இருந்த 8 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 3 லட்சத்து 70 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றனர்.
    • போலீசார் அப்பகுதியில் கிடைத்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் ஆனைக்கல் உள்ளது.

    இங்குள்ள முனிவெங்கடப்பா லே-அவுட் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மஞ்சுநாத். இவர் குடும்பத்தோடு நேற்று முன்தினம் ஆந்திரா மாநிலம், சித்தூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

    அவரது வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மூன்று பேர் நள்ளிரவில், அவரது வீட்டின் முன்பக்க கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

    பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த 8 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 3 லட்சத்து 70 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றனர்.

    பின்னர் அந்த மூன்று திருடர்களும் அதேபகுதியில் இருந்த ஞான சித்தாந்த ஆசிரமத்திற்குள் நுழைந்துள்ளனர். அங்கு திருடுவதற்கு விலை உயர்ந்த பொருள்கள் ஏதும் இல்லாததால் கடும் ஆத்திரத்தில் ஆசிரமத்தில் இருந்த விளக்கு மற்றும் சில பொருள்களை வெளியே தூக்கி எரிந்துள்ளனர்.

    இந்த காட்சிகள் ஆசிரம பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய மஞ்சுநாத்தின் குடும்பத்தினர் வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மஞ்சுநாத் ஆனைக்கல் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    போலீசார் அப்பகுதியில் கிடைத்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மூன்று நபர்கள் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து அப்பகுதியில் நுழைந்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

    இந்த சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
    • மனமுடைந்த லட்சுமிநாராயணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீஸ் சரகம் பொம்மாண்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் லட்சுமிநாராயணன் (வயது 18). சிறுவயதிலேயே இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்.

    இதனால் வேலைவெட்டி எதற்கும் செல்லாமல் குடிப்பதற்கு வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

    இது குறித்து அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த லட்சுமிநாராயணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிந்து லட்சுமிநாராயணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 18- ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
    • கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் இந்த புகார் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகேயுள்ள பழைய பேட்டை கொத்த பேட்டை காலனி பகுதியை சேர்ந்தவர் ஞானவேல்.

    இவரது 17 வயது மகள் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். கடந்த 18- ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    இது குறித்து ஞானவேல் தந்த புகாரில் தனது மகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுகள்ளார்.

    கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் இந்த புகார் குறித்து விசாரித்து வருகின்றனர். 

    • ஒரு ஆட்டுக்குட்டி காணாமல் போய்விட்டது.
    • சிறு காயம் இன்றி உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர் தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள கீழ் வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மனைவி மீனா. இவர்கள் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

    தினசரி இவர்களது ஆடுகளை அருகில் உள்ள வனப் பகுதிகளுக்கும்,மலைப் பகுதிகளுக்கும் மேய்ச்சலுக்காக ஓட்டி செல்வது வழக்கம்.

    நேற்று முன்தினம் காலையில் மீனா ஆடுகளை வழக்கம்போல மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார் .மீ ண்டும் மாலையில் ஆடுகளுடன் வீடு திரும்பினார். இதில் ஒரு ஆட்டுக்குட்டி காணாமல் போய்விட்டது.

    இதனால் வருத்தம் அடைந்த மீனா மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற பகுதிகளில் எல்லாம் உறவினர்களின் உதவியுடன் தேடிப் பார்த்தனர். அப்போது கீழ் வெங்கடாபுரம் அருகில் உள்ள 500 அடி மலை உச்சியில் பாறையின் இடுக்கில் ஆட்டுக்குட்டி மாட்டிக்கொண்டு கத்தி கொண்டு இருந்தது.

    இதனை கண்டவர்கள் ஆட்டுக்குட்டியை மீட்க உடனடியாக பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் பழனி, கிருஷ்ணமூர்த்தி, பிரதாப், ராஜ்குமார், விமல், ஆகியோர் தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் மலை அடிவாரத்தில் இருந்து கரடு, முரடான பாதையிலும் மரம், செடி, கொடிகள் அடர்ந்த காட்டு பகுதிகளிலும் இரவு நேரம் என்பதால் டார்ச் லைட் வெளிச்சத்தில் சென்று ஆட்டுக்குட்டியை சிறு காயம் இன்றி உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர் தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    • சுந்தருக்கும், லட்சுமிக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
    • குடிபோதையில் இருந்த சுந்தர் ஆத்திரத்தில் அருகே கிடந்த அரிவாள்மனையை எடுத்து லட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது முதல் மனைவி கலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

    இதனால் கோபித்து கொண்டு கலா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பெங்களூருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து லட்சுமி என்ற பெண்ணை சுந்தர் 2-வதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று இரவு சுந்தருக்கும், லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த சுந்தர் ஆத்திரத்தில் அருகே கிடந்த அரிவாள்மனையை எடுத்து லட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இன்று காலை லட்சுமி வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது கழுத்து அறுக்கப்பட்டு லட்சுமி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப தகராறில் கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஓசூர் பஸ் நிலையத்தில் மேயர் ஆய்வு செய்தார்.
    • சுகாதாரத்தை கடைபிடிக்க உத்தரவிட்டார்.

    ஓசூர்,

    ஓசூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகம் மற்றும் பஸ் நிலையத்தில் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை,கழிவறைகளை பார்வையிட்டு பொதுமக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில், தூய்மை பணியாளர்கள் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றுஅறிவுறுத்தினார்.

    அதனைதொடர்ந்து பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டு உணவு தயாரிக்கும் சமையலறை,உணவு பொருட்களை நேரடியாக பார்வையிட்டு, சுத்தமானதாகவும், தரமானதாகவும் உணவை தயார் செய்யுமாறு பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, ஆணையாளர் பாலசுப்ரமணியன்,துணை மேயர் ஆனந்தய்யா, கவுன்சிலர்கள் ரவி, மல்லிகா தேவராஜ், உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×