என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேன்கனிக்கோட்டையில் உள்ள   தேர்ப்பேட்டை மந்தைவெளி மாரியம்மன் கோவில் திருவிழா
    X

    தேன்கனிக்கோட்டையில் உள்ள தேர்ப்பேட்டை மந்தைவெளி மாரியம்மன் கோவில் திருவிழா

    • மந்தைவெளி மாரியம்மன் கோவிலுக்கு சென்று திரளான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்து வழிபட்டனர்.
    • வீதிகள் தோறும் நகர் முழுவதும் மாவிலைதோரணங்கள், வேப்பிலை தோரணங்களும் கட்டப் பட்டு மின்விளக்கு களால் நகர் முழுவதும் ஜொலித்தது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள தேர்ப்பேட்டையில் அமைந்துள்ள மந்தைவெளி மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஊர் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தும், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வீதிகள் தோறும் நகர் முழுவதும் மாவிலைதோரணங்கள், வேப்பிலை தோரணங்களும் கட்டப் பட்டு மின்விளக்கு களால் நகர் முழுவதும் ஜொலித்தது.

    மந்தைவெளி மாரியம்மன் கோவிலுக்கு சென்று திரளான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்து வழிபட்டனர். பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர் . அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் ஒரு வாரம் கையில் மஞ்சள் காப்பு கட்டி விரதமிருந்து ஆண்களும், பெண்களும், முதுகில் அலகு குத்திக் கொண்டு அதில் கயிறு கட்டி டெம்போ, ஆட்டோ, கார் உருளைகல் ஆகியவற்றை இழுத்து கொண்டு சென்றனர். ஆடு ,கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செய்தனர்.

    அதேபோல் நகரில் அமைந்திருக்கும் பட்டாளம்மன், கங்கையம்மன, உத்தண்டி மாரியம்மன், சேலத்து மாரியம்மன், ஓம் சக்தி அம்மன் ஆகிய கோயில்களுக்கு பெண்கள் மாவிளக்குடன் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    முன்னதாக நேற்று இரவு பூக்கரகத்துடன் பெண்கள் தீச்சட்டி ஏந்தி மேளத்தாளத்துடன் அலகு குத்து கொண்டு ஊர்வலமாக சென்று தீக்குண்டம் இறங்கி தீ மிதித்து நேர்த்திகடன் செய்தனர்.

    இந்த திருவிழாவை காண தேன்கனிகோட்டை சுற்றுபுற பக்தர்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் கலந்துகொண்டு வழிப்பட்டனர்.

    Next Story
    ×