என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
- கிருஷ்ணகிரியில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
- நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிருஷ்ணகிரி நகரம், தொழிற்பேட்டை, பவர் ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி 1,2, பழையபேட்டை, காட்டிநாயனப்பள்ளி, அரசு ஆண்கள் கலை கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், பெல்லாரம் பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி, தானம் பட்டி, கொண்டேப்பள்ளி, பில்லனகுப்பம், சாமந்த மலை, தளவாய்ப்பள்ளி, நெடு மருதி, கே.திப்பனப் பள்ளி, பி.கொத்தூர், கல்லுகுறுக்கி, மேல்படடி, பூசாரிப்பட்டி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது.






