என் மலர்
நீங்கள் தேடியது "ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்பு"
- ஒரு ஆட்டுக்குட்டி காணாமல் போய்விட்டது.
- சிறு காயம் இன்றி உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர் தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள கீழ் வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மனைவி மீனா. இவர்கள் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
தினசரி இவர்களது ஆடுகளை அருகில் உள்ள வனப் பகுதிகளுக்கும்,மலைப் பகுதிகளுக்கும் மேய்ச்சலுக்காக ஓட்டி செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் காலையில் மீனா ஆடுகளை வழக்கம்போல மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார் .மீ ண்டும் மாலையில் ஆடுகளுடன் வீடு திரும்பினார். இதில் ஒரு ஆட்டுக்குட்டி காணாமல் போய்விட்டது.
இதனால் வருத்தம் அடைந்த மீனா மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற பகுதிகளில் எல்லாம் உறவினர்களின் உதவியுடன் தேடிப் பார்த்தனர். அப்போது கீழ் வெங்கடாபுரம் அருகில் உள்ள 500 அடி மலை உச்சியில் பாறையின் இடுக்கில் ஆட்டுக்குட்டி மாட்டிக்கொண்டு கத்தி கொண்டு இருந்தது.
இதனை கண்டவர்கள் ஆட்டுக்குட்டியை மீட்க உடனடியாக பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் பழனி, கிருஷ்ணமூர்த்தி, பிரதாப், ராஜ்குமார், விமல், ஆகியோர் தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் மலை அடிவாரத்தில் இருந்து கரடு, முரடான பாதையிலும் மரம், செடி, கொடிகள் அடர்ந்த காட்டு பகுதிகளிலும் இரவு நேரம் என்பதால் டார்ச் லைட் வெளிச்சத்தில் சென்று ஆட்டுக்குட்டியை சிறு காயம் இன்றி உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர் தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.






