என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.
    • ஆத்திரமடைந்த ஜனார்த்தனன் தன்னுடன் வரவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி தாக்க முற்பட்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது36). இவரது மனைவி சுகன்யா (31).

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் சுகன்யா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    மனைவியின் தாய் வீட்டுக்கு சென்ற ஜனார்த்தனன் மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு சுகன்யா மறுத்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஜனார்த்தனன் தன்னுடன் வரவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி தாக்க முற்பட்டுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டதால் அங்கிருந்து ஜனார்த்தனன் தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து சுகன்யா கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜனார்தனனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 70 ஆண்டு கனவான நீண்டநாள் கோரிக்கையான ரெயில்பாதை அமைக்க முதல் கட்டப்பணிக்கு டி. பி. ஆர்-காக மத்திய அரசிடம் நிதி ஒதுக்கீடு.
    • பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    கிருஷ்ணகிரி

    சோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூர் வரை ரயில் இயக்க வேண்டும் என மாவட்ட மக்களின் கோரிக்கையாக நீண்ட நாட்களாக இருந்து வந்தது.

    மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் மத்தியநிதி அமைச்சகத்தினை அனுகி திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.2 கோடியே 45 லட்சம் நிதி ஒதிக்கீடு பெற்று தந்த கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமாருக்கு நன்றி தெரிவித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி ரவுண்டானா, ராயக்கோட்டை மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் சேகர் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியின் போது கிருஷ்ணகிரி நகர மக்களின் 70 ஆண்டு கனவான நீண்டநாள் கோரிக்கையான ரெயில்பாதை அமைக்க முதல் கட்டப்பணிக்கு டி. பி. ஆர்-காக மத்திய அரசிடம் நிதி ஒதுக்கீடு பெற்று தந்த, சோனியாகாந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆசியுடன், கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர்.டாக்டர் செல்லக்குமாருக்கு நன்றி தெரிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிக்கொண்டாடினர்.

    அப்போது முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காசிலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, எஸ் நாராயணமூர்த்தி எஸ்.சி எஸ்டி பிரிவு பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுகம், நகர தலைவர் லலித் ஆண்டனி, சேவாதள மாவட்ட முன்னாள் தலைவர் நாகராஜன், வட்டாரத் தலைவர்கள், ராமமூர்த்தி, சித்திக், நாகராஜன், முன்னாள் நகர தலைவர் முபாரக், செய்தி தொடர்பாளர் கமலக்கண்ணன் மாவட்ட செயலாளர் ஹரி, தொழிற்சங்க தலைவர் மைக்கேல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிலால், முனீர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • மாதத்திற்கு ரூ. 5 கோடி வருமானம் வரும் திருச்செந்தூர் கோவிலிலும், 250 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் பழனி கோவிலிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும்.
    • தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட கோவில்களில் எந்தவித பூஜையும் நடப்பதில்லை.

    ஓசூர்,

    இந்து முன்னணி அமைப்பின் சார்பில், "இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயணம், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை யில் மேற்கொள்ளப்பட்டு, நேற்று ஓசூர் வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஓசூர் காமராஜ் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காடேஸ்வரா சுப்பிரமணியம், தென்பாரத அமைப்பாளர் ஜெகதீஷ் கரந்த், மாநில பொதுச்செயலாளர் கிஷோர் உள்பட பலர் பேசினார்கள்.

    மேலும் இதில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் காடேஸ்வரா சுப்ரமணியம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில், இந்து அறநிலையத்துறை மோச மாகவும், இந்துக்களுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருகிறது. அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்கள் மீட்கப்ப டுவதில்லை. மாதத்திற்கு ரூ. 5 கோடி வருமானம் வரும் திருச்செந்தூர் கோவிலிலும், 250 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் பழனி கோவிலிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும். தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட கோவில்களில் எந்தவித பூஜையும் நடப்பதில்லை. அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    • காவேரி பட்டினம் பேரூராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை தரம் வாரியாக பிரித்து நவீன எந்திரங்கள் மூலம் உரங்களாக தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.
    • பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தகவல்.

    காவேரிப்பட்டணம்,

    காவேரிப்பட்டணம் பேரூ ராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பைகளாக தரம் பிரித்து அதிலிருந்து உரம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது என பேரூராட்சித் தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது, தமிழக அரசு நகராட்சி பேரூராட்சிகளில் சேரும் குப்பைகளை தரம் வாரியாக பிரித்து,அதை உரமாக தயாரித்து விற்பனை செய்யலாம் என உத்தரவு விடுத்துள்ள அடிப்படையில் காவேரி பட்டினம் பேரூராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை தரம் வாரியாக பிரித்து நவீன எந்திரங்கள் மூலம் உரங்களாக தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.

    எனவே,விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளவும், அரசுக்கு வருவாய் கிடைத்தி டவும், கேட்டுக்கொள்கிறேன் என்றார் .

    நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், வார்டு கவுன்சிலர்கள் நித்யா, கீதா, தமிழ்ச்செல்வி, கோகுல்ராஜ் மற்றும் பாரதிராஜா, சிவப்பிரகாசம், மாருதி, முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • அவர் இன்றுகாலை பஸ் நிலையத்தில் பிணமாக கிடந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் சுற்றி திரிந்தார். இந்நிலையில் அவர் இன்றுகாலை பஸ் நிலையத்தில் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • திப்பனப்பள்ளி பஞ்சா யத்தை பசுமையாக்கும் வகையில், 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் தங்கள் காலி நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு, சுத்தமான காற்றுடன் பசுமையான பகுதியாக மாற்ற பாடுபட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பனப்பள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட கும்மனூர் கிராமத்தில் நேரு யுவகேந்திரா, காந்தி இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.

    இந்த விழாவிற்கு கும்மனூர் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பர்கூர் எம்.எல்.ஏ., மதியழகன் பங்கேற்று, மரக்கன்று நடும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திப்பனப்பள்ளி பஞ்சா யத்தை பசுமையாக்கும் வகையில், 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளது. மரம் இருந்தால் தான் மழை பொழியும். மழை பொழிந்தால் தான் நிலம் பசுமை பெறும்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் காலி நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு, சுத்தமான காற்றுடன் பசுமையான பகுதியாக மாற்ற பாடுபட வேண்டும்.

    பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவைப்படும் தென்னங்கன்று, வேப்பம் உள்ளிட்ட மரக்கன்றுகளை வனத்துறையினர் இலவ சமாக வழங்குகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். பின்னர் நேரு யுவகேந்திரா, காந்தி இளைஞர் மன்றம் சார்பில் கும்மனூர் பகுதி இளைஞர்களுக்கு, ரூ.4 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை அவர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், நேரு யுவகேந்திராவை கணக்காளர் அப்துல் காதர், கிழக்கு மாவட்ட தி.மு.க பொருளாளர் ராஜேந்திரன், வனத்துறை அலுவலர்கள் குமார், சக்திவேல், சோமசேகர், வருவாய் ஆய்வாளர் ஜெயபாரதி, கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சின்னசேலம் அருகில் தனியார் பள்ளி மாணவி மரணத்தில் தி.மு.க., அரசு சரியாக செயல்படவில்லை.
    • சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்ற வில்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். ஊத்தங்கரை எம்,எல்,ஏ., தமிழ்செல்வம், முன்னாள் எம்,எல்,ஏ.,கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சமரசம், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணகிரி கிழக்கு கண்ணியப்பன், மேற்கு சோக்காடி ராஜன், வேப்பனபள்ளி சைலேஷ்கிருஷ்ணன், காவேரிப்பட்டணம் பையூர் ரவி, கெலமங்கலம் முருகன், ஊத்தங்கரை ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச் செயலாளராக முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்வது.

    அதே போல், துணைப் பொதுச் செயலாளராக கே.பி.முனுசாமியை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது. அ.தி.மு.கவின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் அனைத்து பொறுப்பிலிருந்தும் ஓ.பன்னீர்செல்வம், வைத்தி யலிங்கம், மனோஜ்பாண்டியன், பிரபாகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கியதை வரவேற்பது.

    அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை அடித்து, உடைத்து, பூட்டி சீல் வைக்கக் காரணமாக இருந்த கட்சி துரோகிகளை வன்மையாக கண்டிப்பது, கொரோனா தொற்றால் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், சொத்துவரி மற்றும் மின்கட்டணத்தை உயர்த்திய தி.மு.க., அரசிற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகில் தனியார் பள்ளி மாணவி மரணத்தில் சரியாக செயல்படாத தி.மு.க., அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்.

    சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத விடியா தி.மு.க., அரசை வன்மையாக கண்டிக்கின்றோம். பொதுமக்களை வெகுவாக பாதிக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியதற்கு ஸ்டாலின் தலைமையிலான அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, நகர செயலாளர் கேசவன், அம்மா பேரவை மாவட்டத் தலைவர் தங்கமுத்து, பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், பேரூராட்சி செயலாளர் விமல், ஐடி பிரிவு வேலன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் மக்புல், மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜி, மகளிர் அணி கல்பனா உள்பட பலர் பங்கேற்றனர். மத்தூர் ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

    • வட்டார அளவிலான போட்டிகள் பர்கூர் மற்றும் சூளகிரி வட்டாரங்களிலும் நடைபெறுகிறது.
    • வருகிற 25ம் தேதியன்று மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது என்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வட்டார அளவில் பள்ளிகளுக்கிடையே செஸ் போட்டி நடந்தது. இந்த போட்டியினை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து, மாணவர்களுடன் செஸ் விளையாடினார்.

    பின்னர் அவர் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.

    இதையொட்டி கிருஷ்ண கிரி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் செஸ் போட்டிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரி வட்டார அளவிலான 175 பள்ளிகளை சேர்ந்த 550 மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற செஸ் போட்டி இன்று (நேற்று) நடைபெறுகிறது.

    இப்போட்டியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவியர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுகின்றனர். இதே போல் வட்டார அளவிலான போட்டிகள் பர்கூர் மற்றும் சூளகிரி வட்டாரங்களிலும் நடைபெறுகிறது. வருகிற 25ம் தேதியன்று மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது என்றார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் சர்தார், கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் திவ்யலட்சுமி, சிதம்பரம், சைமன்ஜார்ஜ், ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து பொதுமக்களிடையே யோகா பயிற்சியின் அவசியம் குறித்து விளக்கினார்.
    • இதில், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த கட்டிக்கானப்பள்ளி சிறுவர் பூங்காவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஹோமியோபதி ஆணையரகம் மூலம் நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைந்து யோகா பயிற்சி முகாமை நடத்தி வருகிறது.

    அதன்படி கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் உள்ள சிறுவர் பூங்காவில், மேகலசின்னம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்.பிரேமா தலைமையில், மருத்துவ பணியாளர்கள், யோகா பயிற்றுனர் அடங்கிய குழுவினர் யோகா பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர்.

    கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். இதில், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து டாக்டர்.பிரேமா கூறுகையில், தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து பொதுமக்களிடையே யோகா பயிற்சியின் அவசியத்தையும், பலன்களையும் எடுத்து கூறி முகாம்களை நடத்தி வருகிறோம்.

    இனி வாரம்தோறும் புதன் கிழமையன்று கட்டிகானப்பள்ளி சிறுவர் பூங்காவில் யோகா பயிற்சி முகாம் தொடர்ந்து நடைபெறும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    • அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம்.
    • எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு வருகை தர உள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு வருகை தர உள்ளார்.

    அதையொட்டி அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து இன்று காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமி கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். அப்படி பேசுவதற்கு அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமியை வன்மையாக கண்டிக்கிறேன்.
    • இன்றும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்தான். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

    ஓசூர்,

    அ.தி.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான பெங்களூரு புகழேந்தி ஓசூரில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அந்த சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கூறிவிட்டார்.

    ஆனால், எடப்பாடி பழனிசாமி கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். அப்படி பேசுவதற்கு அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமியை வன்மையாக கண்டிக்கிறேன். இன்றும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்தான். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக, ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளது செல்லவே செல்லாது. இது வெறும் கண்துடைப்புதான். தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என எல்லா இடங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வெற்றி கிடைக்கும். சட்டமும் அவருக்கு சாதகமாக அமையும்.

    சபாநாயகரும் நியாயமான, நல்ல தீர்ப்பு வழங்குவார் என்று நம்புகிறோம்.அ.தி.மு.க.விற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் ஓ.பன்னீர்செல்வம் பின்னால் ஆணித்தரமாக நிற்கிறோம். எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வு முழுமையாக முடியும்வரை, நானும் என்னை சார்ந்தவர்களும் தூங்கமாட்டோம், ஓயமாட்டோம்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    • நாளை காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடக்கும்.
    • தலைமைக்கழகம் அறிவித்துள்ள உரிய கட்டணத்துடன் வழங்க வேண்டும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க.வின் 15-வது கட்சித்தேர்தலையொட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஓசூர் மாநகரம், 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.

    அந்த பகுதி நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், நாளை (வியாழக் கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை, ஓசூரில் தளி சாலையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில், தலைமை கழகத்தால் தேர்தல் ஆணை யாளராக அறிவிக்கப்பட்டு உள்ள முன்னாள் எம்.எல்.ஏ.வி.சி. சந்திரகுமாரிடம் வேட்பு மனுக்களை பூர்த்தி செய்து, தலைமைக்கழகம் அறிவித்துள்ள உரிய கட்டணத்துடன் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில், பிரகாஷ் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

    ×