என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்"

    • சின்னசேலம் அருகில் தனியார் பள்ளி மாணவி மரணத்தில் தி.மு.க., அரசு சரியாக செயல்படவில்லை.
    • சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்ற வில்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். ஊத்தங்கரை எம்,எல்,ஏ., தமிழ்செல்வம், முன்னாள் எம்,எல்,ஏ.,கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சமரசம், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணகிரி கிழக்கு கண்ணியப்பன், மேற்கு சோக்காடி ராஜன், வேப்பனபள்ளி சைலேஷ்கிருஷ்ணன், காவேரிப்பட்டணம் பையூர் ரவி, கெலமங்கலம் முருகன், ஊத்தங்கரை ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச் செயலாளராக முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்வது.

    அதே போல், துணைப் பொதுச் செயலாளராக கே.பி.முனுசாமியை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது. அ.தி.மு.கவின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் அனைத்து பொறுப்பிலிருந்தும் ஓ.பன்னீர்செல்வம், வைத்தி யலிங்கம், மனோஜ்பாண்டியன், பிரபாகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கியதை வரவேற்பது.

    அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை அடித்து, உடைத்து, பூட்டி சீல் வைக்கக் காரணமாக இருந்த கட்சி துரோகிகளை வன்மையாக கண்டிப்பது, கொரோனா தொற்றால் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், சொத்துவரி மற்றும் மின்கட்டணத்தை உயர்த்திய தி.மு.க., அரசிற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகில் தனியார் பள்ளி மாணவி மரணத்தில் சரியாக செயல்படாத தி.மு.க., அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்.

    சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத விடியா தி.மு.க., அரசை வன்மையாக கண்டிக்கின்றோம். பொதுமக்களை வெகுவாக பாதிக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியதற்கு ஸ்டாலின் தலைமையிலான அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, நகர செயலாளர் கேசவன், அம்மா பேரவை மாவட்டத் தலைவர் தங்கமுத்து, பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், பேரூராட்சி செயலாளர் விமல், ஐடி பிரிவு வேலன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் மக்புல், மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜி, மகளிர் அணி கல்பனா உள்பட பலர் பங்கேற்றனர். மத்தூர் ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

    ×