என் மலர்
கிருஷ்ணகிரி
- பர்கூர் அருகே வாலிபர் நூதன முறையில் ஏமாற்றப்பட்டார்.
- ரூ.24.000 சுருட்டியவர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் ராஜன் (வயது 35). இவர் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.
இவருக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் போலீஸ் என்றும், ராஜனின் கம்ப்யூட்டர் சென்டரில் சர்ச்சைக்குரிய வீடியோ இருப்பதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.24 ஆயிரம் பணம் தர வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து அந்த நபர் கொடுத்த எண்ணுக்கு ராஜன் பணம் அனுப்பி உள்ளார். ஆனால்அதன் பிறகு போலீஸ் வட்டாரத்தில் ராஜன் விசாரித்தார். அப்போதுதான் தன்னிடம் பேசியது மோசடி ஆசாமி என்பதும், தான் ஏமாந்ததும் ராஜனுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் ராஜன் புகார் செய்தார். தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை நடத்திய போலீசார் ராஜனை ஏமாற்றிய கோவை மாவட்டத்தை சேர்ந்த மகாலிங்கம் (22) என்ற வாலிபரை கைது செய்தனர்.
- தீயணைப்பு படை வீரர்கள் பேரிடர் கால மேலாண்மை ஒத்திகை பயிற்சியை செய்து காட்டினார்கள்.
- தீயணைப்பு வீர்ர்கள் ஜிஞ்சுப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து லைப் ஜாக்கெட், லைப் பாய், கயிறு மூலும் மீட்பு செயல்முறை பயிற்சி அளித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சியில் தென்மேற்கு பருவமழை கால பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடந்தது.
கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு படை மாவட்ட அலுவலர் மகாலிங்கம் அறிவுறுத்தலின்படி தீயணைப்பு படை வீரர்கள் பேரிடர் கால மேலாண்மை ஒத்திகை பயிற்சியை செய்து காட்டினார்கள்.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். பயிற்சியின்போது பேசிய கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு படை நிலைய அலுலவலர் வெங்கடாசலம் வரவிருக்கும் தென்மேற்கு பருவமழை காலங்களில் ஆற்றங்கரை ஓரங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும். அப்போது பெண்கள் ஆற்றில் துணி துவைக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.
அவ்வாறு சென்றாலும் குழந்தைகளை அழைத்து செல்ல கூடாது. மழை பெய்யும் நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்ப கூடாது என்றார்.
மேலும், தண்ணீரில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீர்ர்கள் ஜிஞ்சுப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து லைப் ஜாக்கெட், லைப் பாய், கயிறு மூலும் மீட்பு செயல்முறை பயிற்சி அளித்தனர்.
இதில் ஜிஞ்சுப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி தலைமை யாசிரியை கிருஷ்ணவேணி, பள்ளி மாணவர்கள், ஊராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.
- இப்பேரணியை, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. மற்றும் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஓசூர்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதையொட்டி ஓசூரில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்ட இப்பேரணியை, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. மற்றும் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ராம்நகர்அண்ணாசிலையருகில்தொடங்கிய பேரணியானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
இதில் சப்-கலெக்டர் தேன்மொழி, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், ஏ.டி.எஸ்.பி.அரவிந்த், துணை மேயர் ஆனந்தய்யா, தாசில்தார் கவாஸ்கர், மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார்.
- வீட்டில் தனியாக இருந்த பவித்ரா வீட்டில் மரவேலைக்கு பயன்படுத்தும் தின்னரை தன் உடல் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த கே.பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது40) கார்பென்டர். இவரது மகள் பவித்ரா, (20). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், கடந்த சில தினங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் அவரை கல்லூரி விடுதியிலிருந்து, வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த பவித்ரா வீட்டில் மரவேலைக்கு பயன்படுத்தும் தின்னரை தன் உடல் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்து மகராஜாகடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சொந்த செலவில் சுமார்ரூ.7லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை கட்டப்பட்டுள்ளது.
- சூளகிரி ஊராட்சிஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் திறந்து வைத்தார்.
சூளகிரி,
சூளகிரி ஒன்றியம்கோ னேரிப்பள்ளி ஊராட்சி நல்லகானகொத்தபள்ளி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கோபம்மா சக்கரலப்பா சொந்த செலவில் சுமார்ரூ.7லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி னார். அதை சூளகிரி ஊராட்சிஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் லஷ்மம்மா தியாகராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் புஷ்பராஜ், மற்றும் சுரேஷ்,ஆஞ்சி,வெங்கடேஷ், ஊராட்சி மன்ற செயலர் விஜி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். மன்ற தலைவரை பாராட்டினர்.
- அனில்குமார் சம்பவத்தன்று விஷம் குடித்துவிட்டு தான் தங்கியிருந்த அறையிலேயே மயங்கி கிடந்துள்ளார்.
- சிகிச்சை பலனின்றி அனில்குமார் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஹட்கோ போலீஸ் சரகம் எளச்சிகிரி பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (வயது56). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும், இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 15 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
தனியாக வசித்து வந்த அனில்குமார் சம்பவத்தன்று விஷம் குடித்துவிட்டு தான் தங்கியிருந்த அறையிலேயே மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அனில்குமார் உயிரிழந்தார்.
இது குறித்து ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தமிழகம் முழுவதும் சுமார் நாலே முக்கால் லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
- வேலாயுத சுவாமி கோவிலுக்கு 1500 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் பூஜை செய்ய பணம் இல்லை.
கிருஷ்ணகிரி,
கோவில்கள் அருகில் உள்ள இறைச்சி கடைகளை அகற்றாவிட்டால் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார். தமிழகம் முழுவதும் இந்து உரிமை மீட்பு பிரசாரம் மேற்கொண்டுள்ள இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், நேற்று கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்து உரிமை மீட்பு பிரசார பயணம் ஜூன் 28-ந் தேதி திருச்செந்தூரில் ெதாடங்கி 24 நாளாவது நாளாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்துக்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை மறுக்கப்படுகிறது. கோவிலில் 90 சதவீதம் அறங்காவலர்களை நியமிக்காமல் உள்ளனர். உடனடியாக நியமிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரியில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் கோவிலைப் போல், பல்வேறு கோவில்கள் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளன. தேன்கனிக்கோட்டை பேட்ராய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது.
அறநிலையத்துறை அமைச்சர் கோவில் நிலங்களை மீட்பதாக பொய்யான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு உள்ளது என்று நாங்களே காட்டுகிறோம். அவற்றை அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும்.
அதே போல் குத்தகை பணம் வராமல் உள்ள கோவில் விவரங்களையும் நாங்களே தருகிறோம். அவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும்.
மன்னார்குடி, திருச்செந்தூர், தாராபுரம் உள்பட தமிழகம் முழுவதும் சுமார் நாலே முக்கால் லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
காங்கேயத்தில் ஊதியூர் மலையில் சித்தர்கள் வாழ்ந்த இடத்தில் உத்தாண்ட வேலாயுத சுவாமி கோவிலுக்கு 1500 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் பூஜை செய்ய பணம் இல்லை.
இதே போல் பத்தாயிரம் கோவில்களில் பூஜை மற்றும் வழிபாடுகள் இல்லாமல் உள்ளன. பழனி கோவிலில் ஆண்டுக்கு 250 கோடி ரூபாயும், திருச்செந்தூரில் மாதம் 5 கோடி ரூபாயும் வருமானம் கிடைக்கிறது. இதை அரசாங்கம் நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். கோவில்கள் அருகில் உள்ள இறைச்சிக்கடைகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்து முன்னணி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும்.
கோவில்கள் மூலம் 7 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இதை முறையாக பயன்படுத்த வேண்டும். கோவில் வருமானத்தைக் கொண்டு தமிழகத்திற்கு துண்டுவிழாமல் பட்ஜெட் போடலாம் என்று நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. அந்த அளவிற்கு வருமானம் உள்ளது. அதில் பெரிய ஊழலும் நடக்கிறது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதை நாங்கள் எதிர்க்கவில்லை. கிராமங்களில் சாதி பாகுபாடு இன்றியே பூஜைகள் நடந்து வருகிறது. இது ஒன்றும் புதியது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்டத் தலைவர் கலைகோபி, நகர தலைவர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- இன்றுகாலை 6 மணி அளவில் லாரி உள்பட 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது.
- விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த நாட்டான் கொட்டாய் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்றுகாலை 6 மணி அளவில் லாரி உள்பட 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது.
இதில் காவேரிப்பட்டி னத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் கனரக வாகனத்தில் வந்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஒரு டெம்போ டிராவலர் வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
- வேனில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று மாலை ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில், வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு டெம்போ டிராவலர் வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 350 கிலோ தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் அவற்றை யும், டெம்போ டிராவலர் வேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், பெங்க ளூரு கெங்கேரி பகுதியை சேர்ந்த சேத்தன் (26) மற்றும் நெலமங்கலா அருகே தாசன்புராவை சேர்ந்த யோகேஷ் (22) ஆகிய இருவரும் ஓசூர் வழியாக சென்னைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
- நேற்று சாந்தா மேய்ச்சலுக்கு மாடு பிடித்து செல்லும் பொழுது மின்வயர் அறுந்து பசு மாடு மீது விழுந்தது.
- ஒரு பசுமாடு கழுத்தில் மின் கம்பி சிக்கி சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகே உள்ள பாப்பாரப்பட்டி பஞ்சாயத்து பெரிய புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த காவேரி என்பவரது மனைவி சாந்தா.விவசாய கூலித்தொழிலாளி. இவர் 3 பசுமாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று சாந்தா மேய்ச்சலுக்கு மாடு பிடித்து செல்லும் பொழுது மின்வயர் அறுந்து பசு மாடு மீது விழுந்தது.
இதில் ஒரு பசுமாடு கழுத்தில் மின் கம்பி சிக்கி சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பண்ணந்தூர் மின் உதவி பொறியாளர் அருள் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பண்ணந்தூர் கால்நடை மருத்துவமனை மருத்துவர் சோமசுந்தரம் பசுமாட்டை பிரேதப்பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.
மின் ஒயர் சிக்கி பசுமாடு இறந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
- அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி,
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
காலை, 7 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தன.
பகல், 12 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன. இதில், ஏராளமான பெண்கள் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் ெசய்திருந்தனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டன.
இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டையில் உள்ள தட்சிண காலபைரவர் கோவில் மற்றும் கந்திகுப்பம் கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக பூவரசன் மீது மோதியது.
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகேயுள்ள பர்கூர் கொண்டப்ப நாயக்கண பள்ளி பகுதியை சேர்ந்தவர் பூவரசன் (26). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக பூவரசன் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.






