என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொந்த செலவில் ரேஷன் கடை"

    • சொந்த செலவில் சுமார்ரூ.7லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை கட்டப்பட்டுள்ளது.
    • சூளகிரி ஊராட்சிஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் திறந்து வைத்தார்.

    சூளகிரி,

    சூளகிரி ஒன்றியம்கோ னேரிப்பள்ளி ஊராட்சி நல்லகானகொத்தபள்ளி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கோபம்மா சக்கரலப்பா சொந்த செலவில் சுமார்ரூ.7லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி னார். அதை சூளகிரி ஊராட்சிஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் லஷ்மம்மா தியாகராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் புஷ்பராஜ், மற்றும் சுரேஷ்,ஆஞ்சி,வெங்கடேஷ், ஊராட்சி மன்ற செயலர் விஜி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். மன்ற தலைவரை பாராட்டினர்.

    ×