என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூர் அருகே  போலீஸ் என்று கூறி ஏமாற்றி வாலிபரிடம் ரூ.24 ஆயிரம் மோசடி
    X

    பர்கூர் அருகே போலீஸ் என்று கூறி ஏமாற்றி வாலிபரிடம் ரூ.24 ஆயிரம் மோசடி

    • பர்கூர் அருகே வாலிபர் நூதன முறையில் ஏமாற்றப்பட்டார்.
    • ரூ.24.000 சுருட்டியவர் கைது செய்யப்பட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் ராஜன் (வயது 35). இவர் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.

    இவருக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் போலீஸ் என்றும், ராஜனின் கம்ப்யூட்டர் சென்டரில் சர்ச்சைக்குரிய வீடியோ இருப்பதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.24 ஆயிரம் பணம் தர வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

    இதையடுத்து அந்த நபர் கொடுத்த எண்ணுக்கு ராஜன் பணம் அனுப்பி உள்ளார். ஆனால்அதன் பிறகு போலீஸ் வட்டாரத்தில் ராஜன் விசாரித்தார். அப்போதுதான் தன்னிடம் பேசியது மோசடி ஆசாமி என்பதும், தான் ஏமாந்ததும் ராஜனுக்கு தெரியவந்தது.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் ராஜன் புகார் செய்தார். தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை நடத்திய போலீசார் ராஜனை ஏமாற்றிய கோவை மாவட்டத்தை சேர்ந்த மகாலிங்கம் (22) என்ற வாலிபரை கைது செய்தனர்.

    Next Story
    ×