என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காடேஸ்வரா சுப்ரமணியம் பேட்டி"

    • தமிழகம் முழுவதும் சுமார் நாலே முக்கால் லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
    • வேலாயுத சுவாமி கோவிலுக்கு 1500 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் பூஜை செய்ய பணம் இல்லை.

    கிருஷ்ணகிரி,

    கோவில்கள் அருகில் உள்ள இறைச்சி கடைகளை அகற்றாவிட்டால் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார். தமிழகம் முழுவதும் இந்து உரிமை மீட்பு பிரசாரம் மேற்கொண்டுள்ள இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், நேற்று கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்து உரிமை மீட்பு பிரசார பயணம் ஜூன் 28-ந் தேதி திருச்செந்தூரில் ெதாடங்கி 24 நாளாவது நாளாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்துக்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை மறுக்கப்படுகிறது. கோவிலில் 90 சதவீதம் அறங்காவலர்களை நியமிக்காமல் உள்ளனர். உடனடியாக நியமிக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரியில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் கோவிலைப் போல், பல்வேறு கோவில்கள் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளன. தேன்கனிக்கோட்டை பேட்ராய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது.

    அறநிலையத்துறை அமைச்சர் கோவில் நிலங்களை மீட்பதாக பொய்யான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு உள்ளது என்று நாங்களே காட்டுகிறோம். அவற்றை அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும்.

    அதே போல் குத்தகை பணம் வராமல் உள்ள கோவில் விவரங்களையும் நாங்களே தருகிறோம். அவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும்.

    மன்னார்குடி, திருச்செந்தூர், தாராபுரம் உள்பட தமிழகம் முழுவதும் சுமார் நாலே முக்கால் லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

    காங்கேயத்தில் ஊதியூர் மலையில் சித்தர்கள் வாழ்ந்த இடத்தில் உத்தாண்ட வேலாயுத சுவாமி கோவிலுக்கு 1500 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் பூஜை செய்ய பணம் இல்லை.

    இதே போல் பத்தாயிரம் கோவில்களில் பூஜை மற்றும் வழிபாடுகள் இல்லாமல் உள்ளன. பழனி கோவிலில் ஆண்டுக்கு 250 கோடி ரூபாயும், திருச்செந்தூரில் மாதம் 5 கோடி ரூபாயும் வருமானம் கிடைக்கிறது. இதை அரசாங்கம் நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். கோவில்கள் அருகில் உள்ள இறைச்சிக்கடைகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்து முன்னணி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும்.

    கோவில்கள் மூலம் 7 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இதை முறையாக பயன்படுத்த வேண்டும். கோவில் வருமானத்தைக் கொண்டு தமிழகத்திற்கு துண்டுவிழாமல் பட்ஜெட் போடலாம் என்று நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. அந்த அளவிற்கு வருமானம் உள்ளது. அதில் பெரிய ஊழலும் நடக்கிறது.

    அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதை நாங்கள் எதிர்க்கவில்லை. கிராமங்களில் சாதி பாகுபாடு இன்றியே பூஜைகள் நடந்து வருகிறது. இது ஒன்றும் புதியது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்டத் தலைவர் கலைகோபி, நகர தலைவர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×