என் மலர்
நீங்கள் தேடியது "செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி"
- 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.
- இப்பேரணியை, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. மற்றும் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஓசூர்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதையொட்டி ஓசூரில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்ட இப்பேரணியை, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. மற்றும் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ராம்நகர்அண்ணாசிலையருகில்தொடங்கிய பேரணியானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
இதில் சப்-கலெக்டர் தேன்மொழி, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், ஏ.டி.எஸ்.பி.அரவிந்த், துணை மேயர் ஆனந்தய்யா, தாசில்தார் கவாஸ்கர், மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






