search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரிக்கு  எடப்பாடி பழனிசாமி 22-ந் தேதி வருகை
    X

    கிருஷ்ணகிரிக்கு எடப்பாடி பழனிசாமி 22-ந் தேதி வருகை

    • அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம்.
    • எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு வருகை தர உள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு வருகை தர உள்ளார்.

    அதையொட்டி அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து இன்று காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×