மத்தூர் பஸ் நிலையத்தில் பிணமாக கிடந்த முதியவர் யார்?- போலீசார் விசாரணை

முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அவர் இன்றுகாலை பஸ் நிலையத்தில் பிணமாக கிடந்தார்.
மத்தூர் பஸ் நிலையத்தில் பிணமாக கிடந்த முதியவர் யார்?- போலீசார் விசாரணை
Published on

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் சுற்றி திரிந்தார். இந்நிலையில் அவர் இன்றுகாலை பஸ் நிலையத்தில் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com