என் மலர்
உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாற்றுத்திறனாளி அரசு பள்ளி மாணவருக்கு, காடேஸ்வரா சுப்பிரமணியம், ஜெகதீஷ் கரந்த் ஆகியோர் பரிசு வழங்கிய போது எடுத்த படம்.
அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்கள் மீட்கப்படுவதில்லை- ஓசூரில் இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி
- மாதத்திற்கு ரூ. 5 கோடி வருமானம் வரும் திருச்செந்தூர் கோவிலிலும், 250 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் பழனி கோவிலிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும்.
- தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட கோவில்களில் எந்தவித பூஜையும் நடப்பதில்லை.
ஓசூர்,
இந்து முன்னணி அமைப்பின் சார்பில், "இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயணம், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை யில் மேற்கொள்ளப்பட்டு, நேற்று ஓசூர் வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஓசூர் காமராஜ் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காடேஸ்வரா சுப்பிரமணியம், தென்பாரத அமைப்பாளர் ஜெகதீஷ் கரந்த், மாநில பொதுச்செயலாளர் கிஷோர் உள்பட பலர் பேசினார்கள்.
மேலும் இதில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் காடேஸ்வரா சுப்ரமணியம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில், இந்து அறநிலையத்துறை மோச மாகவும், இந்துக்களுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருகிறது. அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்கள் மீட்கப்ப டுவதில்லை. மாதத்திற்கு ரூ. 5 கோடி வருமானம் வரும் திருச்செந்தூர் கோவிலிலும், 250 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் பழனி கோவிலிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும். தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட கோவில்களில் எந்தவித பூஜையும் நடப்பதில்லை. அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.






