என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பா.ஜ.க. அரசையும், அமலாக்கத்துறையையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பா.ஜ.க. அரசையும், அமலாக்கத்துறையையும் கண்டித்து ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, மாவட்ட தலை வர்முரளிதரன் தலைமை தாங்கி கண்டன உரை யாற்றினார்.

    மாநில செய லாளர் வீர. முனிராஜ், பிரபாகர் உள்பட பலர் பேசினர். மாவட்ட பொருளாளர் மகாதேவன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயல்தலைவர் அசேன், முத்தப்பா, சுரேஷ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா மற்றும் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின்போது பா.ஜ.க. அரசையும், அமலாக்கத்துறையையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.
    • புளிய மரம் ஒன்றில் ரமேஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை ரெட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் . இவருக்கு திருமணமாகி பரமேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் ரமேஷ் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு ஊர் சுற்றி வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

    நேற்று ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ரமேஷ் அதே பகுதியில் உள்ள புளிய மரம் ஒன்றில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சிங்காரபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • கடந்த 24- ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார்.
    • டிரைவர் ராஜா (வயது 28) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என பெண்ணின் தாயார் புகார் கொடுத்தார்.

     கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகேயுள்ள ஓ.காரப்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் கடந்த 24- ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார்.

    இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து தாய் சரஸ்வதி ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அந்த புகாரில் தனது மகளை பெட்டகரப்பள்ளி பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜா (வயது 28) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர்க ளுக்கு திட்டம் மற்றும் வள பயிற்சி நடைபெற்றது.
    • இதில் 39 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சூளகிரி,

    சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சியில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர்க ளுக்கு திட்டம் மற்றும் வள பயிற்சி நடைபெற்றது. இதில் 39 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சியில் அந்தந்த ஊராட்சி மன்றத்தில் உள்ள அனை த்து பணிகளிலும் சார்ந்து பணியாற்ற வேண்டும். பொதுவாக துய்மை ,சுகாதாரம், குடிநீர் வசதி, மற்றும் வீட்டு வரி ,குடிநீர் வரி, டெங்கு, கொரோனா மற்றும் வியாதிகள் பரவாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கைக்கு முன் உதாரணமாக செயல்பட வேண்டும் என வலியுருத்தினர். இந்த கூட்டத்திற்கு துணை பி.டி.ஒ.க்கள் சண்முகம், உமாசங்கர், முகிலன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டென்சிங், முருகன், காமராஜ், கணகராஜ், சரவணன், ஆகியோர் பஙகேற்றனர்.

    • போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாமல்லபுரத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டி மற்றும் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவுள்ளனர்.
    • சர்வதேச அளவிலான சர்வதேச போட்டியில் பார்வையாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதை யொட்டி கடந்த 2-ம் தேதி மற்றும் 15-ம் தேதி என 2 நாட்கள் பள்ளி மாணவ, மாணவர்களுக்கிடையே செஸ் விளையாட்ட போட்டிகள் நடந்தது. அப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான செஸ் போட்டி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இந்த போட்டியினை மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) முத்துமாரி தொடங்கி வைத்தார்.

    மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கேடயம், இரண்டாம் பரிசாக ரூ.800க்கான காசோலை மற்றும் கேடயம், மூன்றாம் பரிசாக ரூ.500க்கான காசோலை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை செஸ் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாமல்லபுரத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டி மற்றும் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவுள்ளனர்.

    அதே போல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான சர்வதேச போட்டியில் பார்வையாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

    மாமல்லபுரத்திற்கு செல்லவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு பெங்களூர் முதல் சென்னை வரை சென்று வர விமானம் மூலம் இலவசமாக அழைத்து செல்லப்படவுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நகர்மன்ற தலைவர் பரிதாநாவப், துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, பள்ளி தலைமை ஆசிரியர் சேரலாதன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 

    • மூர்த்தியும், ராகவியும் காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
    • வேறு ஒருவரை திருமணம் செய்ததால் கத்தியால் ராகவியை மூர்த்தி சரமாரியாக குத்தினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது30). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராகவி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில் மூர்த்தி கேரளாவுக்கு வேலைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது ராகவி, முருகவேல் என்பவரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த மூர்த்தி ராகவியை சந்தித்து தன்னிடம் பழகிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்வதா? என தகராறு செய்துள்ளார்.

    பின்னர் தான் செலவு செய்த பணத்தை திருப்பிக்கொடு என்று கேட்டுள்ளார். அப்போது தான் வைத்திருந்த கத்தியால் ராகவியை மூர்த்தி சரமாரியாக குத்தினார்.

    இதில் காயம் அடைந்த ராகவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தமிழக அரசின் புதிய திட்டங்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்தது.
    • இந்த கண்காட்சியை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள் பார்வையிட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

    இதில் தமிழக அரசின் புதிய திட்டங்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், கிருஷ்ணகிரி மாவட்ட மலை கிராம மக்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை, கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

    இந்த கண்காட்சியை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள் பார்வையிட்டனர்.

    • ஆலோசனை கூட்டம், மாநகர மாவட்ட செயலாளர் ராமசாமி ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
    • (ஆகஸ்ட்) மாதம் 25-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தின் பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர தே.மு.தி.க உட்கட்சித் தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம், மாநகர மாவட்ட செயலாளர் ராமசாமி ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு, மாநகர கட்சிப் பொறுப்பாளர் சீனிவாச மூர்த்தி, அவைத்தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில், அடுத்த (ஆகஸ்ட்) மாதம் 25-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தின் பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    மேலும், நாளை ( 27-ந் தேதி) மின்சார கட்டண உயர்வு, ஜிஎஸ்டி ஆகியவற்றை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கூட்டத்தின்போது, விண்ணப்ப படிவங்கள், கட்சியினருக்கு வழங்கப்பட்டது.

    இதில், ஒன்றிய செயலாளர் கண்டராயன், மாநகர பொருளாளர் அப்பய்யா, அறிவழகன், வெங்கடேஷ், மணி, உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.

    • நள்ளிரவு மர்ம நபர்கள் நைசாக கதவை திறந்துள்ளனர்.
    • திட்டம் போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள களர்பதி கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் பர்கத் (வயது40). இவர் தனியார் பஸ்சில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வீட்டின் அருகே புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீட்டின் வேலை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

    அதனால் பர்கத் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் புதிய வீட்டிற்கு மாற்றிய உள்ளார். அந்த வீட்டில் தற்காலிக கதவு அமைக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு அனைவரும் புதிய வீட்டில் அயர்ந்து படுத்து தூங்கியுள்ளனர். நள்ளிரவு மர்ம நபர்கள் நைசாக கதவை திறந்துள்ளனர். பின்னர் பீரோவை மெதுவாக திறந்து அதில் இருந்த 23 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். மேலும் அங்கிருந்த 4 செல்போன்களையும் எடுத்து வெளியே வந்தனர்.

    வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த பர்கத்தின் இருசக்கர வாகனத்தை தள்ளி சிறிது தூரம் கொண்டு வந்தனர். பின்னர் ஸ்டாட் செய்து சிட்டாக அங்கிருந்து பறந்து சென்றனர்.

    நேற்றுகாலை பர்கத் எழுந்து பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அைடந்தார். மேலும் 4 செல்போன்கள், இருசக்கர வாகனங்கள் திருடு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் கொள்ளை நடந்த இடத்திற்கு வந்து பார்வை யிட்டனர்.

    அப்போது மர்ம நபர்கள் நள்ளிரவு இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது ெதரிய வந்தது. திட்டம் போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். திருடு போன பைக் உள்பட பொருட்கள் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் இருக்கும் என பர்கத் போலீசாரிடம் கூறினார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவு மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த ஒரு கம்பியை எதிர்பாராதவிதமாக சத்யன் தொட்டுவிட்டார்.
    • இதில் தூக்கி வீசப்பட்டு நேற்று சத்யன் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கனகமுட்லு கிராமத்தை சேர்ந்தவர் சத்யன் (வயது 23). இவர் தளி அருகேயுள்ள சரகப்பள்ளி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 23-ந்தேதி லாரியில் கோழிகளை ஏற்றும் பணியில் சக தொழிலாளர்களுடன் சத்யனும் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த ஒரு கம்பியை எதிர்பாராதவிதமாக சத்யன் தொட்டுவிட்டார்.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சத்யனை ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்த தளி போலீசார் சத்யனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போச்சம்பள்ளி தாலுகாவில் 991 பேர் தேர்வு எழுதவில்லை.
    • சூளகிரி தாலுகாவில்195 பேர் தேர்வு எழுதவில்லை.

    கிருஷ்ணகிரி,

    தமிழகம் முழுவதும் நேற்று, தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் பல்வேறு பதவிகளுக்கான குரூப்-4 தேர்வு நடந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவில் 144 தேர்வு மையங்களில் நேற்று தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத மொத்தம் 45 ஆயிரத்து 522 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் 48 மையங்களில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 16,354 பேரில் 13,336 பேர் தேர்வு எழுதினர். 3,018 பேர் தேர்வு எழுதவில்லை. இதே போல் அஞ்செட்டி தாலுகாவில் ஒரு மையத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 425 பேரில் 364 பேர் தேர்வு எழுதினார்கள். 61 பேர் தேர்வு எழுதவில்லை.

    பர்கூர் தாலுகாவில் 11 மையங்களில் 3,167 பேரில் 2,694 பேர் தேர்வு எழுதினர், 473 பேர் தேர்வு எழுதவில்லை. ஓசூர் தாலுகாவில் 35 மையங்களில் 10 ஆயிரத்து 601 பேரில் 7,868 பேர் தேர்வு எழுதினர். 2,733 பேர் தேர்வு எழுதவில்லை. போச்சம்பள்ளி தாலுகாவில் 23 மையங்களில் 6,759 பேரில், 5,768 பேர் தேர்வு எழுதினர். 991 பேர் தேர்வு எழுதவில்லை.

    சூளகிரி தாலுகாவில் 4 மையங்களில் 1,064 பேரில், 869 பேர் தேர்வு எழுதினார்கள். 195 பேர் தேர்வு எழுதவில்லை. தேன்கனிக்கோட்டை தாலுகாவில் 4 மையங்களில் 1,405 பேரில் 1114 பேர் தேர்வு எழுதினர். 291 பேர் தேர்வு எழுதவில்லை. இதே போல் ஊத்தங்கரை தாலுகாவில் 18 மையங்களில் 5,747 பேரில் 4915 பேர் தேர்வு எழுதினர்.

    832 பேர் தேர்வு எழுத வில்லை. மாவட்டத்தில் நேற்று 144 மையங்களில் நடந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்திருந்த 45 ஆயிரத்து 522 பேரில் 36 ஆயிரத்து 928 பேர் தேர்வுஎழுதினர். 8 ஆயிரத்து 594 பேர் தேர்வு எழுதவில்லை. இதன்படி, விண்ணப்பித்து இருந்தவர்களில் 81.12 சதவீதம் பேர் தேர்வு எழுதினார்கள்.

    கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி அமைக்கப்பட்டிருந்த மையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். சில மையங்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வராத தேர்வர்கள் அனுமதிக் கப்படவில்லை.

    இதனால் அந்த தேர்வு மையங்களில் சிறிது நேரம் விண்ணப்பதாரர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது.

    இதேபோல் தருமபுரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு எழுத 66,637 நபர்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டது. இதில் 57,960 தேர்வர்கள் இத்தேர்வினை எழுதி உள்ளனர். 8,677 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் ெதரிவித்தனர்.

    • சாலையை விரிவாக்கும் பணி நடைபெற்றது.
    • வாக்கு வாதத்தில் ஈடுபட்டு மேற்கொண்டு பணிபுரிய விடாமல் தடுத்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை - ஓசூர் சாலையில் அமைந்துள்ள கிராமம் கொரட்டகிரி. இந்த கிராமத்தைச் சுற்றி 5 கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது,

    இந்த கல்குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால் கொரட்டகிரி கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் விரிசல் அடைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனை கண்டித்து சம்பவத்தன்று கொரட்டகிரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை நெடுஞ்சாலையில் இருந்து கொரட்டகிரி வழியாக முகலூர் (கல் குவாரிக்கு) செல்லும் சாலையை விரிவாக்கும் பணி நடைபெற்றது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம பொதுமக்கள் நேற்று சாலை விரிவாக்க பணியில் இருந்தவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு மேற்கொண்டு பணிபுரிய விடாமல் தடுத்தனர்.

    இதனால் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்படவே அவர்கள் கலெக்டரை நாட முடிவு செய்தனர்.

    பின்பு ஓசூர் கோட்டாட்சி யர் தேன்மொழி தலைமையில் ஏ.எஸ்.பி. அரவிந்த், டி.எஸ்.பி. கார்த்திகா, தாசில்தார் குருநாதன், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் திருமலை செல்வன் முன்னிலையில் கோட்டாட்சியர் அலுவ லகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த பேச்சு வார்த்தையில் கொரட்டகிரி கிராம மக்கள், கிருஷ்ணகிரி பா.ஜ.க.மாவட்ட தலைவர் நாகராஜ், மாவட்ட துணை தலைவர் சீனிவாச ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சமரச பேச்சுவார்த்தையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும்.

    தற்போது அமைக்கபட உள்ள கொரட்ட கிரி கிராம வழி விரிவாக்க சாலையில் கனரக வாகன போக்குவரத்தால் பொது மக்கள் பாதிக்காத வண்ணம் நிர்வாகத்தின் மூலம் ஆய்வு செய்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளால் முடிவு செய்யபட்டது.

    இதை அடுத்து கிராம பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×