என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • இரண்டாவது நாளாக கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலை அருகில் அறப்போராட்டம் நடந்தது.
    • கிழக்கு மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.

    கிருஷ்ணகிரி,

    சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரண்டாவது நாளாக கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலை அருகில் அறப்போராட்டம் நடந்தது.

    மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, காசிலிங்கம், முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சில் ஜேசுதுரை, மாவட்ட துணைத் தலைவர் சேகர், நகர தலைவர் லலித் ஆண்டனி, சேவா தளம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் விவேகானந்தன், வட்டாரத் தலைவர்கள் மாது, நஞ்சுண்டன், தொழிற்சங்க மாவட்ட தலைவர் மைக்கேல், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் கமலக்கண்ணன், முன்னாள் நகர தலைவர் முபாரக், பிலால், சாம்பல்பட்டி முருகேசன், சக்திவேல், வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 15 லட்சம் மதிப்பில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
    • பணியை பிரகாஷ் எம்.எல்.ஏ.-மேயர் சத்யா தொடங்கி வைத்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி 5,6-வது வார்டுக்குட்பட்ட இயற்கை நகர் பகுதியில் சுமார் 15 லட்சம் மதிப்பில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.

    இதற்கான பணிகளை செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தனர்.

    இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ், ராமு , மாமன்ற உறுப்பினர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • கெலமங்கலம் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகளாக கருணாநிதி, தஸ்தகிர், சுரேஷ், ஹரி, ஆவுாபி உள்பட நியமனம் செய்யப்பட்டது.
    • காவேரிப்பட்டினம் பேரூர் கழக நிர்வாகிகளாக விவேகானந்தன், பாபு, விஜயகுமார், வேல் முருகன், மீனாட்சி உள்பட நியமனம் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்ந்தெ டுக்கப்பட்ட தி.மு.க. பேரூர் கழக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், கெலமங்கலம் ஓன்றியம், தேன்கனிக்கோட்டை பேரூர் கழக புதிய நிர்வாகிகளாக வி.சீனிவாசன், டி.ஆர்.சீனி வாசன், இதயத்உல்லா, முத்தாண்டவன், பொட்டி யம்மாள், வெங்­கடேஷ், சக்திவேல், ஸ்ரீதர், ரமேஷ், முகம்மது சித்திக்பாஷா, அல்லாபகஷ், சுப்பிரமணி, திம்மராஜ் ஆகியோரை நியமனம் செய்யப்பட்டது.

    கெலமங்கலம் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகளாக கருணாநிதி, தஸ்தகிர், சுரேஷ், ஹரி, ஆவுாபி, ஆனந்தன், அலெக்கிஸ், உமாராணி, முருகேசன், சான்பாஷா, வஞ்சிரகுமார், செந்தமிழ், நாகராஜ் ஆகியோரை நியமனம் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி கிழக்கு காவேரிப்பட்டினம் ஒன்றியம், நாகரசம்பட்டி பேரூர் கழக நிர்வாகிகளாக முருகு மணியரசு, தம்பிதுரை, ரமேஷ், ராஜசேகர், சங்கீதா சக்திவேல், உதயகுமார், தங்கராஜ், ராதாகிருஷ்­ணன், சதாசிவம், பிரபு, அண்ணாதுரை, ஜெயராமன், மாதேஷ்வரன் ஆகியோரை நியமனம் செய்யப்பட்டது.

    காவேரிப்பட்டினம் பேரூர் கழக நிர்வாகிகளாக விவேகானந்தன், பாபு, விஜயகுமார், வேல் முருகன், மீனாட்சி, ஜெகதீசன், இளங்கோவன், மோகன், பசுபதிராஜ், பாஸ்கர், ஞானசேகர், சீனிவாசன், மணி ஆகியோரை நியமனம் செய்யப்பட்டது.

    ஊத்தங்கரை தெற்கு பேரூர் கழக நிர்வாகிகளாக தணிகைகுமரன், பாபு சிவக்குமார், சாதிக்பாஷா, திராவிடமணி, தேவி, கதிர்வேல், குப்புசாமி, சார்லஸ், புஷ்பராஜ், விஸ்வ நாதன், தவுலத்பாட்ஷா, குமரேசன், மணி ஆகியோரை நியமனம் செய்யப்பட்டது.

    பர்கூர் பேரூர் கழக நிர்வாகிகளாக இளங்கோவன், வெங்­கட்டப்பன், மகேந்திரன், அனுராதா, பொற்பதவள்ளி கிருபாகரன், வீரவேல், கார்த்திகேயன், ஜான் ஜேசுதாஸ், செந்தில்குமார், கார்த்திகேயன், மணிபாரதி, ரமேஷ், பாலாஜி ஆகியோரை நியமனம் செய்யப்பட்டது.

    • சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை அரசால் செயல்படுத்தப்படுகிறது.
    • தேவாலயத்திற்கு ரூ.3 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாட்டில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை அரசால் செயல்படுத்தப்படுகிறது.

    தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டடத்தின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15-20 வருடங்கள் இருப்பின் ரூ.2 லட்சமும், 20 வருடத்திற்கு மேற்பட்ட தேவாலயத்திற்கு ரூ.3 லட்சமும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு, கிறித்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

    தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும். தேவாலயத்தினை சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சான்றிதழ் (பிற்சேர்க்கை III ) அளிக்க வேண்டும்.

    சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதியுதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதியுதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.

    விண்ணப்ப படிவத்தை பிற்சேர்க்கை II - III உள்ளவாறு சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.bcmbcmw@tn.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை படிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

    மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு அவ்விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தகுதியின் அடிப்படையில் தேவாலயங்களை ஸ்தல ஆய்வு செய்து, கட்டடத்தின் வரைப்படம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் கூடிய முன்மொழிவினை சிறுபான்மையினர் நல இயக்ககத்திற்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். மேலும், இப்பொருள் தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தி லுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

    எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்து சீரமைத்து கொள்ள ஏதுவாக சம்பந்தப்பட்ட தேவாலய நிர்வாகிகள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 24வது மாவட்ட மாநாடு பேரணி நடந்தது.
    • கூட்டத்திற்கு தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 24வது மாவட்ட மாநாடு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் பூதட்டியப்பா முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சின்னசாம வரவேற்புரை ஆற்றினார். மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.

    • பா.ஜனதா கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் குந்தாரப்பள்ளியில் நடந்தது.
    • கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வி.எம்.அன்பரசன் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி தெற்கு ஒன்றிய பா.ஜனதா கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் குந்தாரப்பள்ளியில் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வி.எம்.அன்பரசன் தலைமை தாங்கினார். வேப்பனப்பள்ளி ஒன்றிய தலைவர் ஸ்ரீராமுலு, நிர்வாகிகள் பிரகாஷ், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் மாவட்ட ராணுவ பிரிவு சார்பில் அறிமுக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பா .ஜ .க.செயற்குழு கூட்டம் ஒன்றியத் தலைவர் சிவன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • கிராமந்தோறும் அதிக உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும் கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், மத்தூர் மேற்கு மண்டல

    பா .ஜ .க.செயற்குழு கூட்டம் ஒன்றியத் தலைவர் சிவன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளரும் மாவட்ட செயலாளருமான சரவணன், பார்வையாளர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கிராமந்தோறும் அதிக உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும் கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் மாவட்ட கூட்டுறவுத் பிரிவு தலைவர் சுரேஷ், ஒன்றிய பொருளாளர் காலயரசன், மாவட்ட ராணுவ பிரிவு செயலாளர் பெருமாள், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவுத் தலைவர் வெங்கடேசன், மண்டல பொது செயலாளர்களான இராமச்சந்திரன்,துரை, துணை தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், அணி பிரிவு தலைவர்கள், கிளை தலைவர்கள் ஒன்றிய அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கையில் எந்தி வந்தார்.
    • பள்ளி வளாகத்தில் பேரணியாக வலம் வந்தார்கள்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரியில் இருந்து சூளகிரிக்கு கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் இளங்கோ செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கையில் எந்தி வந்தார்.

    அவரை ஒதர்- கிருஷ்ணகிரிசாலை வருவாய் அலுவலகம் முன்பு சூளகிரி தாசில்தார் தேன்மொழி, வருவாய் அலுவலர் ரமேஷ், மற்றும் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் முத்தையா கவுடா பள்ளி பி.டி.ஏ. தலைவர் ராமன், துணைத் தலைவர் ஷானு, ஜெபஸ்றின் , அஸ்பர், சுதாகர், பள்ளி மாணவர்கள் மலர் தூவி வரவேற்றனர். பின்பு பள்ளி வளாகத்தில் பேரணியாக வலம் வந்தார்கள்.

    • கிருஷ்ணகிரி வழியாக ஒசூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தது.
    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை குறிக்கும் வகையில் பள்ளி மைதானத்தில் 44 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    ஓசூர்,

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு நகரங்கள் வழியாக வலம் வந்த ஒலிம்பியாட் ஜோதி, நேற்று தமிழகம் வந்தடைந்தது.

    கிருஷ்ணகிரி வழியாக ஒசூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தது. ஒசூர் எம்.எல்.ஏ பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பளித்தனர்.

    பின்னர் பள்ளியின் தடகள போட்டிகளில் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை ஜோதிகா, குதிரை மீது அமர்ந்து ஒலிம்பியாட் ஜோதியினை மாணவர்கள் காணும் வகையில் மைதானத்தில் வலம் வந்தார். அதனை தொடர்ந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை குறிக்கும் வகையில் பள்ளி மைதானத்தில் 44 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, ஓசூர் தாசில்தார் கவாஸ்கர், மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள், மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • குடிபோதையில் விக்கிரமசோழன் தனது பக்கத்து வீட்டுக்காரரான ராமமூர்த்தி என்பவரிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விக்கிரமசோழனை கைது செய்தனர்.

     மத்தூர்,

    கிருஷ்ணகிரி அருகேயுள்ள கல்லாவி அருேக மன்னடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்கிரமசோழன்.

    இவர் குடிபோதையில் தனது பக்கத்து வீட்டுக்காரரான ராமமூர்த்தி என்பவரிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ராமமூர்த்தி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து ராமமூர்த்தி கல்லாவி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விக்கிரமசோழனை கைது செய்தனர்.

    • பறவை காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சூளகிரி,

    சூளகிரி தாலுகா பேரிகை பத்தலபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலில் காவடி திருவிழா நடைபெற்றது.

    பேரிகை, காளிங்காவரம், திராடி, பெத்தசிகரளப் பள்ளி மற்றும் பல கிராமங்களில் இருந்தும் அண்டை மாநிலம் கர்நாடகத்தில் இருந்தும் பக்தர்கள் அலகு குத்தி பறவை காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    • சாமுவேலின் அண்ணன் சூர்யாவிடம் சென்று அறிவானந்தன் உள்ளிட்ட 4 பேரும் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தியுள்ளனர்.
    • சூர்யா கொடுத்த புகாரின் பேரில் அறிவானந்தன் உள்ளிட்ட 4 பேர் மீது கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகா சவுளூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.

    இதற்கு அந்த பெண் வசிக்கும் பகுதியை சேர்ந்த அறிவானந்தன், கிருஷ்ணமூர்த்தி, வெற்றிவேல், சேது ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது.

    ஆனால் அதையும் மீறி சாமுவேல் தனது காதலை தொடர்ந்துள்ளார். இதனால் சாமுவேலின் அண்ணன் சூர்யாவிடம் சென்று அறிவானந்தன் உள்ளிட்ட 4 பேரும் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சூர்யா கொடுத்த புகாரின் பேரில் அறிவானந்தன் உள்ளிட்ட 4 பேர் மீது கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ×