என் மலர்
நீங்கள் தேடியது "பா.ஜனதா செயற்குழு கூட்டம்"
- பா.ஜனதா கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் குந்தாரப்பள்ளியில் நடந்தது.
- கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வி.எம்.அன்பரசன் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி தெற்கு ஒன்றிய பா.ஜனதா கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் குந்தாரப்பள்ளியில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வி.எம்.அன்பரசன் தலைமை தாங்கினார். வேப்பனப்பள்ளி ஒன்றிய தலைவர் ஸ்ரீராமுலு, நிர்வாகிகள் பிரகாஷ், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் மாவட்ட ராணுவ பிரிவு சார்பில் அறிமுக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.






