என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்
- இரண்டாவது நாளாக கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலை அருகில் அறப்போராட்டம் நடந்தது.
- கிழக்கு மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.
கிருஷ்ணகிரி,
சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரண்டாவது நாளாக கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலை அருகில் அறப்போராட்டம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, காசிலிங்கம், முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சில் ஜேசுதுரை, மாவட்ட துணைத் தலைவர் சேகர், நகர தலைவர் லலித் ஆண்டனி, சேவா தளம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் விவேகானந்தன், வட்டாரத் தலைவர்கள் மாது, நஞ்சுண்டன், தொழிற்சங்க மாவட்ட தலைவர் மைக்கேல், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் கமலக்கண்ணன், முன்னாள் நகர தலைவர் முபாரக், பிலால், சாம்பல்பட்டி முருகேசன், சக்திவேல், வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






