கிருஷ்ணகிரி அருகே காதல் தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து

சாமுவேலின் அண்ணன் சூர்யாவிடம் சென்று அறிவானந்தன் உள்ளிட்ட 4 பேரும் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தியுள்ளனர்.சூர்யா கொடுத்த புகாரின் பேரில் அறிவானந்தன் உள்ளிட்ட 4 பேர் மீது கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே காதல் தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி தாலுகா சவுளூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.

இதற்கு அந்த பெண் வசிக்கும் பகுதியை சேர்ந்த அறிவானந்தன், கிருஷ்ணமூர்த்தி, வெற்றிவேல், சேது ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது.

ஆனால் அதையும் மீறி சாமுவேல் தனது காதலை தொடர்ந்துள்ளார். இதனால் சாமுவேலின் அண்ணன் சூர்யாவிடம் சென்று அறிவானந்தன் உள்ளிட்ட 4 பேரும் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சூர்யா கொடுத்த புகாரின் பேரில் அறிவானந்தன் உள்ளிட்ட 4 பேர் மீது கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com