என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் கண்டக்டரின் வீட்டில் கொள்ளை"

    • நள்ளிரவு மர்ம நபர்கள் நைசாக கதவை திறந்துள்ளனர்.
    • திட்டம் போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள களர்பதி கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் பர்கத் (வயது40). இவர் தனியார் பஸ்சில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வீட்டின் அருகே புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீட்டின் வேலை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

    அதனால் பர்கத் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் புதிய வீட்டிற்கு மாற்றிய உள்ளார். அந்த வீட்டில் தற்காலிக கதவு அமைக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு அனைவரும் புதிய வீட்டில் அயர்ந்து படுத்து தூங்கியுள்ளனர். நள்ளிரவு மர்ம நபர்கள் நைசாக கதவை திறந்துள்ளனர். பின்னர் பீரோவை மெதுவாக திறந்து அதில் இருந்த 23 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். மேலும் அங்கிருந்த 4 செல்போன்களையும் எடுத்து வெளியே வந்தனர்.

    வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த பர்கத்தின் இருசக்கர வாகனத்தை தள்ளி சிறிது தூரம் கொண்டு வந்தனர். பின்னர் ஸ்டாட் செய்து சிட்டாக அங்கிருந்து பறந்து சென்றனர்.

    நேற்றுகாலை பர்கத் எழுந்து பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அைடந்தார். மேலும் 4 செல்போன்கள், இருசக்கர வாகனங்கள் திருடு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் கொள்ளை நடந்த இடத்திற்கு வந்து பார்வை யிட்டனர்.

    அப்போது மர்ம நபர்கள் நள்ளிரவு இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது ெதரிய வந்தது. திட்டம் போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். திருடு போன பைக் உள்பட பொருட்கள் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் இருக்கும் என பர்கத் போலீசாரிடம் கூறினார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவு மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×