என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேன்கனிக்கோட்டை அருகே  குவாரி சாலை விரிவாக்க பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
    X

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    தேன்கனிக்கோட்டை அருகே குவாரி சாலை விரிவாக்க பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

    • சாலையை விரிவாக்கும் பணி நடைபெற்றது.
    • வாக்கு வாதத்தில் ஈடுபட்டு மேற்கொண்டு பணிபுரிய விடாமல் தடுத்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை - ஓசூர் சாலையில் அமைந்துள்ள கிராமம் கொரட்டகிரி. இந்த கிராமத்தைச் சுற்றி 5 கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது,

    இந்த கல்குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால் கொரட்டகிரி கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் விரிசல் அடைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனை கண்டித்து சம்பவத்தன்று கொரட்டகிரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை நெடுஞ்சாலையில் இருந்து கொரட்டகிரி வழியாக முகலூர் (கல் குவாரிக்கு) செல்லும் சாலையை விரிவாக்கும் பணி நடைபெற்றது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம பொதுமக்கள் நேற்று சாலை விரிவாக்க பணியில் இருந்தவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு மேற்கொண்டு பணிபுரிய விடாமல் தடுத்தனர்.

    இதனால் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்படவே அவர்கள் கலெக்டரை நாட முடிவு செய்தனர்.

    பின்பு ஓசூர் கோட்டாட்சி யர் தேன்மொழி தலைமையில் ஏ.எஸ்.பி. அரவிந்த், டி.எஸ்.பி. கார்த்திகா, தாசில்தார் குருநாதன், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் திருமலை செல்வன் முன்னிலையில் கோட்டாட்சியர் அலுவ லகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த பேச்சு வார்த்தையில் கொரட்டகிரி கிராம மக்கள், கிருஷ்ணகிரி பா.ஜ.க.மாவட்ட தலைவர் நாகராஜ், மாவட்ட துணை தலைவர் சீனிவாச ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சமரச பேச்சுவார்த்தையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும்.

    தற்போது அமைக்கபட உள்ள கொரட்ட கிரி கிராம வழி விரிவாக்க சாலையில் கனரக வாகன போக்குவரத்தால் பொது மக்கள் பாதிக்காத வண்ணம் நிர்வாகத்தின் மூலம் ஆய்வு செய்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளால் முடிவு செய்யபட்டது.

    இதை அடுத்து கிராம பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×