search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில்  குரூப்-4 தேர்வை 17271 பேர் தேர்வு எழுதவில்லை
    X

    கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் குரூப்-4 தேர்வை 17271 பேர் தேர்வு எழுதவில்லை

    • போச்சம்பள்ளி தாலுகாவில் 991 பேர் தேர்வு எழுதவில்லை.
    • சூளகிரி தாலுகாவில்195 பேர் தேர்வு எழுதவில்லை.

    கிருஷ்ணகிரி,

    தமிழகம் முழுவதும் நேற்று, தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் பல்வேறு பதவிகளுக்கான குரூப்-4 தேர்வு நடந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவில் 144 தேர்வு மையங்களில் நேற்று தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத மொத்தம் 45 ஆயிரத்து 522 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் 48 மையங்களில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 16,354 பேரில் 13,336 பேர் தேர்வு எழுதினர். 3,018 பேர் தேர்வு எழுதவில்லை. இதே போல் அஞ்செட்டி தாலுகாவில் ஒரு மையத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 425 பேரில் 364 பேர் தேர்வு எழுதினார்கள். 61 பேர் தேர்வு எழுதவில்லை.

    பர்கூர் தாலுகாவில் 11 மையங்களில் 3,167 பேரில் 2,694 பேர் தேர்வு எழுதினர், 473 பேர் தேர்வு எழுதவில்லை. ஓசூர் தாலுகாவில் 35 மையங்களில் 10 ஆயிரத்து 601 பேரில் 7,868 பேர் தேர்வு எழுதினர். 2,733 பேர் தேர்வு எழுதவில்லை. போச்சம்பள்ளி தாலுகாவில் 23 மையங்களில் 6,759 பேரில், 5,768 பேர் தேர்வு எழுதினர். 991 பேர் தேர்வு எழுதவில்லை.

    சூளகிரி தாலுகாவில் 4 மையங்களில் 1,064 பேரில், 869 பேர் தேர்வு எழுதினார்கள். 195 பேர் தேர்வு எழுதவில்லை. தேன்கனிக்கோட்டை தாலுகாவில் 4 மையங்களில் 1,405 பேரில் 1114 பேர் தேர்வு எழுதினர். 291 பேர் தேர்வு எழுதவில்லை. இதே போல் ஊத்தங்கரை தாலுகாவில் 18 மையங்களில் 5,747 பேரில் 4915 பேர் தேர்வு எழுதினர்.

    832 பேர் தேர்வு எழுத வில்லை. மாவட்டத்தில் நேற்று 144 மையங்களில் நடந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்திருந்த 45 ஆயிரத்து 522 பேரில் 36 ஆயிரத்து 928 பேர் தேர்வுஎழுதினர். 8 ஆயிரத்து 594 பேர் தேர்வு எழுதவில்லை. இதன்படி, விண்ணப்பித்து இருந்தவர்களில் 81.12 சதவீதம் பேர் தேர்வு எழுதினார்கள்.

    கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி அமைக்கப்பட்டிருந்த மையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். சில மையங்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வராத தேர்வர்கள் அனுமதிக் கப்படவில்லை.

    இதனால் அந்த தேர்வு மையங்களில் சிறிது நேரம் விண்ணப்பதாரர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது.

    இதேபோல் தருமபுரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு எழுத 66,637 நபர்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டது. இதில் 57,960 தேர்வர்கள் இத்தேர்வினை எழுதி உள்ளனர். 8,677 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் ெதரிவித்தனர்.

    Next Story
    ×