என் மலர்
கிருஷ்ணகிரி
- விளை நிலத்தில் ‘நிலவுக்கல்’ என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் கி.பி.9-10ஆம் நூற்றாண்டு நுளம்பர் காலத்து கன்னட கல்வெட்டைக் கண்டறிந்தனர்.
- எதிர்த்து போரிட்ட அன்னிகன் என்ற வீர நுளம்ப மன்னனின் படைவீரர்களின் ஒருவரான பாலையா என்ற போர் வீரர் வீர மரணமடைந்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் முதுகலை இரண்டாம் ஆண்டு வரலாற்றுத்துறை மாணவர்கள், தொல்லியல் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்ட போது, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பன்னப்பள்ளி கிராமத்தில், ஊருக்கு வடக்குப்புறம் உள்ள விளை நிலத்தில் 'நிலவுக்கல்' என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் கி.பி.9-10ஆம் நூற்றாண்டு நுளம்பர் காலத்து கன்னட கல்வெட்டைக் கண்டறிந்தனர்.
இது குறித்து பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரச மரபினர்களின் காலத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னட மொழி கல்வெட்டுகள், நடுகற்கள், நடுகல் கல்வெட்டுகள் இங்கு அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது பன்னப்பள்ளி கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டு கி.பி. 9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நுளம்பர் மன்னன் வீரா நுளம்பன் என்று அழைக்கப்படும் அன்னிகன் என்ற மன்னனின் காலத்து கன்னட மொழி நடுகல் கல்வெட்டு ஆகும்.
இந்த நடுகல் கல்வெட்டில், ராஷ்டிரகூட மன்னன் கன்னரதேவன் என்ற மூன்றாம் கிருஷ்ணனின் படைத்தளபதியான அரகெல்லா என்பவர் இப்பகுதியில் படையெடுத்தபோது, அவருடன் எதிர்த்து போரிட்ட அன்னிகன் என்ற வீர நுளம்ப மன்னனின் படைவீரர்களின் ஒருவரான பாலையா என்ற போர் வீரர் வீர மரணமடைந்துள்ளார்.
அவ்வாறு போரில் வீர மரணமடைந்த பாலையாவுக்கு அன்னிகன் என்ற வீர நுளம்பன், அவ்வீரனின் வீரத்தைப் போற்றி நிலம் தானமாக கொடுத்துள்ளான் என்ற செய்தியை இந்த நடுகல் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் போரில் வீரமரணம் அடைந்த பாலையாவின் குடும்ப உறுப்பினர்கள், அவர் வீரத்தையும், அரசன் கொடுத்த நில தானத்தையும் போற்றும் வகையில் இந்த நடுகல்லை எடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இது குறித்து டெல்லி, மத்திய தொல்லியல் துறை, கல்வெட்டுதுறை இயக்குனர் முனைவர் முனிரத்தினம் ரெட்டி கூறுகையில், இக்கன்னட நடுகல் கல்வெட்டு 9-10ம் நூற்றாண்டில் இப்பகுதியில் நடந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றை அறிய முடிகிறது. மேலும் இந்த நடுகல் கல்வெட்டு மூலம் தமிழ்நாட்டில் சோழ மன்னர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டதாகவும் கருத முடிகிறது என்றார்.
- ,சீதைக்கு விநாயகர் மோதிரம் வழங்குவது போன்ற அழகான, வித்தியாசமான சிலை வைக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு கருதி, பாலத்தின் மீது ஒரு தடவைக்கு 10 பேர் மட்டுமே சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர்.
ஓசூர்,
ஓசூர் தேர்பேட்டை இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேர்பேட்டையில் உள்ள தெப்பக்குளத்தில், ரூ.15 லட்சம் செலவில் கே.ஜி.எப்.படக்குழுவினரைக் கொண்டு பாலம் அமைத்து, தீவு போல் செட் அமைத்தும் உள்ளே விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பாலம் வழியாக விநாயகரை தரிசிக்க செல்லும் வழியில்,பிரமாண்ட ராமர் சிலை. 'நிறுவப்பட்டுள்ளது. அதன் பின்புறம் மண்டபத்தில்,சீதைக்கு விநாயகர் மோதிரம் வழங்குவது போன்ற அழகான, வித்தியாசமான சிலை வைக்கப்பட்டுள்ளது.
குளத்தை சுற்றிலும் தீப்பந்தங்கள் ஜொலித்து மேலும் பிரமிப்படைய வைக்கும் வகையில் தத்ரூபமாக செட் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாலத்தின் மீது நடந்து சென்று விநாயகரை தரிசிப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி, பாலத்தின் மீது ஒரு தடவைக்கு 10 பேர் மட்டுமே சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த வித்தியாசமான யோசனை குறித்து விழாக்குழு தலைவரும் ஓசூர் கிழக்குபகுதி அ.தி.மு.க.செயலாளருமான ராஜி, நிருபர்களிடம் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தியை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமார் இலங்கைக்கு பாலம் அமைத்தது போன்று, இங்கு குளத்தின் நடுவே பாலம் அமைக்கப்பட்டது.
அதேபோல், சீதைக்கு அனுமன் மோதிரம் வழங்கியதை, இங்கு விநாயகர் வழங்குவதுபோல் சிலை வைத்துள்ளோம். கே.ஜி.எப்.படத்திற்கு பணிபுரிந்த கலையமைப்பு குழுவினர், இந்த செட் உருவாக்கி தந்தனர். தெப்பக்குளத்தின் உள்ளே குழாய்கள் செலுத்தி, அதன் மேல்புறம் பலகைகள் பொருத்தி, பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.15 லட்சம் செலவிடப்பட்டது. ஒரு வார காலம், இரவு பணி நடைபெற்றது. நற்பணி மன்றத்தினரின் சொந்த செலவில் இந்த பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிவா என்ற 10-ம் வகுப்பு மாணவன் நேற்று இரவு படுத்து தூங்கி கொண்டிருந்துள்ளான்.
- குடிபோதையில் சென்ற ஆசிப், சலாவுதீன், சந்தோஷ், மோகன் ஆகியோர் சிறுவனை எழுப்பி தகராறு செய்து தாக்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரதியார் நகர் 4-வது தெருவில் விநாயகர் சிலை வைத்து பூஜை நடத்தி வருகின்றனர். இங்கு சுரேஷ் என்பவரது மகன் சிவா என்ற 10-ம் வகுப்பு மாணவன் நேற்று இரவு படுத்து தூங்கி கொண்டிருந்துள்ளான்.
அப்போது அவ்வழியாக குடிபோதையில் சென்ற ஆசிப், சலாவுதீன், சந்தோஷ், மோகன் ஆகியோர் சிறுவனை எழுப்பி தகராறு செய்து தாக்கினர். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் தரப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஆசிப் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல கிருஷ்ணகிரி அருகேயுள்ள மதகொண்டப்பள்ளியில் இந்து முன்னணி சார்பில் நாராயணன் (எ) கோழி நாராயணப்பா என்பவர் விநாயகர் சிலை வைத்து பூஜைகள் நடத்தி வருகிறார். அங்கு வந்த மகேஷ், மஞ்சுநாத், சைலஜா ஆகியோர் அப்பகுதியில் கொடிகள் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் நாராயணப்பாவை தாக்கியதாகவும் கூறப்ப டுகிறது.
இதுகுறித்து நாராய ணப்பா தந்த புகாரின்பேரில் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிந்து மகேஷ், மஞ்சுநாத் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- கழிவுநீரை பாதாளசாக்கடை திட்டத்தில் இணைக்கும் பணிகளுக்கு, ரூ.2.67 லட்சம் நிதி வழங்கியுள்ளோம்.
- ஆனால் பாதாள சாக்கடை யுடன் கழிவுநீர் இணைப்பு குழாய்களை முறையாக இணைக்கவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில், மொத்தம் 63 வீடுகள் உள்ளன. இதில், கடந்த 2015ம் ஆண்டு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 32 வீடுகளும் அடங்கும். கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட இந்த காவலர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட செப்டிக் டேங்க் கழிவு நீர் அப்பகுதியிலேயே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இது குறித்து காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கூறுகையில், செப்டிக் டேங்க் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் அடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் கழிவுநீர் வளாகத்திலேயே தேங்கி நிற்கிறது. இதை யாரும் கண்டுகொள்வதில்லை. எங்கள் சொந்த பணத்தில் ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்தாலும் அடுத்த மாதமே செப்டிக் டேங்க் நிரம்பி துர்நாற்றம் வீசுவதோடு, குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது என்றனர்.
இது குறித்து காவலர் குடியிருப்பு வீட்டு வசதி கழக அதிகாரி கூறுகையில், காவலர் குடியிருப்பு வீடுகள் பராமரிப்பை கடந்த, 2017-ம் ஆண்டு நகராட்சி கட்டுப்பாட்டுக்கு வழங்கி ரூ.4.28 லட்சம் டெபாசிட் தொகை கட்டியுள்ளோம். கழிவுநீரை பாதாளசாக்கடை திட்டத்தில் இணைக்கும் பணிகளுக்கு, ரூ.2.67 லட்சம் நிதி வழங்கியுள்ளோம்.
ஆனால் பாதாள சாக்கடை யுடன் கழிவுநீர் இணைப்பு குழாய்களை முறையாக இணைக்கவில்லை. இதனால் அடைப்பு ஏற்பட்டு செப்டிக்டேங்க் கழிவுநீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. மேலும் இங்கு சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படுவதில்லை. குப்பைகள் சரியாக அள்ளப்படுவதில்லை. பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதே இல்லை.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். எனவே, உடனடியாக நகராட்சி நிர்வாகம் இந்த இடத்தை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
- விழாவில் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 132 பேருக்கு இலவச மிதிவண்டி வேப்பனபள்ளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் வழங்கினார்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 132 பேருக்கு இலவச மிதிவண்டி வேப்பனபள்ளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், மேற்கு செயலாளர் ரகுநாத், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சரோஜினி பரசுராமன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜெயராமன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சஞ்சய், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- கும்ப அலங்காரம், யாக சாலை புறப்பாடு ஆகியவை நடந்தன.
- திரவ்யாஹூதி, தத்துவார்ச்சனை, மஹா பூர்ணாஹூதி, உபச்சார பூஜை, தீபாராதனை ஆகியவை நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த சின்னமுத்தூர் கிராமத்தில், மகாசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு கும்ப அலங்காரம், யாக சாலை புறப்பாடு ஆகியவை நடந்தன.
இரவு 7 மணிக்கு முதல்கால யாகவேள்வியும், மஹா பூர்ணாஹூதி, உபச்சார பூஜை, தீபாராதனை, பவன அபிஷேகம், நேத்திரவிதனம், சைனாதிவாசம், பிரசாதம் வினியோகம் ஆகியவையும், இரவு 11 மணிக்கு மூலமூர்த்தி பிரதிஷ்டை, சுவாமிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், நாடிசந்தானம் ஆகியவை நடைபெற்றன.
நேற்று காலை 4 மணிக்கு யாகவேள்வி பூஜைகள் நடந்தன. மகா கணபதி மூலமந்திர ஹோமம், நவக்கிரஹ ஹோமம், திரவ்யாஹூதி, தத்துவார்ச்சனை, மஹா பூர்ணாஹூதி, உபச்சார பூஜை, தீபாராதனை ஆகியவை நடந்தது.
காலை 7 மணிக்கு யாத்ரா தான சங்கல்பம், கடம் புறப்பாடும், வேதம், ராகம், தாளம் வாத்தியங்கள் முழங்க விமான கோபுர கலசங்கள், பரிவார தெய்வங்களுடன் மகாசக்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன.
அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்தகொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடு களை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பானுமதி வீட்டிற்கு சென்ற மசூத்கான், கத்தியை காட்டி மிரட்டி பானுமதியை பலமாக தாக்கியுள்ளார்.
- கழுத்தில் அணிந்திருந்த ரெண்டரை பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடியை சேர்ந்தவர் பானுமதி (வயது 65). ஓய்வு பெற்ற செவிலியர். இவரது கணவர் ராமதாஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் திருமணமாகி பெங்களூருவில் வசித்து வருகிறார்.
பானுமதி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகில் வசிப்பவர் யாஸ்மின். இவரது தம்பி மசூத்கான் (35). ஆட்டோ டிரைவரான இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். கடந்த, 31-ந்தேதி மசூத்கான், மல்லப்பாடியிலுள்ள யாஸ்மின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அருகில் வசிக்கும் பானுமதி வீட்டிற்கு சென்ற மசூத்கான், கத்தியை காட்டி மிரட்டி பானுமதியை பலமாக தாக்கியுள்ளார். அவர் கழுத்தில் அணிந்திருந்த ரெண்டரை பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். படுகாயமடைந்த பானுமதி பர்கூர் அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டார்.
அவருக்கு கழுத்தில், 24 தையல்கள் போடப்பட்டு மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசுக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து பானுமதி தந்த புகாரின்பேரில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய மசூத்கானை நேற்று கைது செய்தனர்.
- முன்னதாக, கிருஷ்ணமூர்த்தி பாகவதர் குழுவினரின் கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதற்கான ஏற்பாடுகளை, பா.ஜ.க.தொழில்துறை பிரிவு மாநில துணைத்தலைவர் கே.ராமலிங்கம், மோகன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
ஓசூர்,
ஓசூரில், சுவாமி விவேகானந்தா எழுச்சி பேரவை சார்பில், ஆன்மீக சொற்பொழிவு நேற்று நடைபெற்றது.
ஓசூர் தர்கா பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், மதுராந்தகம் யோக சாந்தி குருகுல நிறுவனர் சுவாமி பிரம்மயோகானந்தா கலந்துகொண்டு, அருளாசி வழங்கி, சொற்பொழிவாற்றினார்.
முன்னதாக, கிருஷ்ணமூர்த்தி பாகவதர் குழுவினரின் கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, பா.ஜ.க.தொழில்துறை பிரிவு மாநில துணைத்தலைவர் கே.ராமலிங்கம், மோகன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
இதில் விசுவ இந்து பரிஷத் மாநில இணைசெயலாளர் விஷ்ணுகுமார், அன்னையப்பா, மாவட்ட செயலாளர் கிருஷ்ணா, சம்பத், தங்கராஜ், திருமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், செல்வகுமார் நன்றி கூறினார்.
- கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே முகுளப்பள்ளி கேட் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 250 பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
- கொள்ளை குறித்து பாகலூர் போலீசில் வெங்கடேசப்பா புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே முகுளப்பள்ளி கேட் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக வெங்கடேசப்பா என்பவர் வேலைபார்த்து வருகிறார்.
கடந்த நேற்று முன்தினம் இரவு வெங்கடேசப்பாவும், விற்பனையாளர் செல்வ குமாரனும் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை மூடிவிட்டுச்சென்றனர். நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் திறந்து கிடந்தது.
அதிர்ச்சியடைந்த வெங்கடேசப்பா உள்ளே சென்று பார்த்தபோது சுவரில் துளைபோட்டு மது விற்ற தொகை ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 250 பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து பாகலூர் போலீசில் வெங்கடேசப்பா புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
- வித்தியாசமான அரங்கு அமைக்கப்பட்டு இந்தபிரம்மாண்ட சிலை வைக்கப்பட்டுள்ளது.
- இளைஞர்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் சிலை முன்பு நின்று செல்வி எடுத்து மகிழ்ந்தனர்.
ஓசூர்,
விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவிற்கு பெயர் போன ஓசூரிலும் சதுர்த்தி விழா, களைகட்டியது. பண்டிகையையொட்டி, நகரில் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன.
ஓசூர் ஜனப்பர் தெருவில் ஜே.சி.சி குரூப் நண்பர்கள் சார்பில். சினிமாசெட் போன்று வடிவமைக்கப்பட்டு சிவதாண்டவத்துடன் கூடிய விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் இங்கு தரிசிக்க வரும் பெண்களுக்கு துளசி செடிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேவராஜ் தலைமையில் கிரண்குமார், பாபு மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.
ஓசூர் ராம் நகர் அண்ணாசிலையருகில், ஸ்ரீபால் விநாயகா பூஜா மண்டலி சார்பில், 41-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 15 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஓசூர் நேதாஜி ரோடில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் 15 அடி உயர பிரமாண்ட சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அமைப்பின் கோட்ட செயலாளர் நரசிம்மன் தலைமையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஓசூர்- பாகலூர் ரோடு ஜி.ஆர்.டி சர்க்கிள் அருகே திறந்தவெளி மைதானத்தில், சிவசேனா கட்சி சார்பில், "பாலபூர் கணேசா" என்ற வித்தியாசமான 15 அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
வித்தியாசமான அரங்கு அமைக்கப்பட்டு இந்தபிரம்மாண்ட சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை, பொதுமக்கள் நீண்ட வரிசையில் சென்று,வியப்புடன் பார்த்து தரிசித்து செல்கின்றனர். மேலும், இளைஞர்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் சிலை முன்பு நின்று செல்வி எடுத்து மகிழ்ந்தனர். இந்த வித்தியாசமான சிலை குறித்து, சிவசேனா கட்சியின் மாநில அமைப்பு செயலாளர்
ஓசூர் முரளி மோகன், நிருபர்களிடம் கூறியதாவது: -வட இந்தியாவில் மிகவும் பிரபலமான "பாலபூர் கணேசா" என்ற இந்த வித்தியாசமான சிலை, தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக, ஓசூரில்தான் வைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர், காதுகளை அசைத்தவாறும், கண்களை திறந்து மூடுவது போன்றும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். இந்த சிலையின் மதிப்பு மூன்றரை லட்ச ரூபாய் ஆகும். அரங்கின் முன் பகுதியில், ஒரு புறம் சத்ரபதி சிவாஜி, மறுபுறம் பால் தாக்கரே சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது. நடுவில் நீர் வீழ்ச்சி போன்று ''செட்" அமைக்கப்பட்டுள்ளது.உள்ளே, பாலபூர் கணேசாவை பொதுமக்கள் தரிசித்து செல்ல விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 50 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
- அணையின் 8 பிரதான மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கர்நாடகா மாநிலம் பெங்களூர் மற்றும் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதி மற்றும் மாவட்டத்தின் பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஓசூர், சூளகிரி மற்றும் வேப்பனபள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் மழை குறைந்ததால், அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது. அதன்படி, நேற்று காலை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு 14,498 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 14,618 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பிற்பகலில் நீர்வரத்து மேலும் குறைந்தது.
இதையடுத்து பிற்பகல் 1 மணியளவில் அணைக்கு 9140 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 9 கன அடி தண்ணீர், அணையின் 8 பிரதான மதகுகளுக்கும் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 50 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தகூடாது.
- வீட்டையும், தெருவையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டையில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் கேசவமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
தேன்கனிக்கோட்டை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சென்னகிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தகூடாது வீட்டையும், தெருவையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என நம்ம ஊரு சூப்பர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதன் பின் நகரத்தின் முக்கிய வீதிகளின் வழியாக விழிப்புணர்வு பாதகையுடன் பேரணி நடத்தப்பட்டது இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முகிலன், சுகாதார மேற்பார்வையாளர் ஏகாம்பரம், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கஞ்சப்பன் , ஊராட்சி செயலாளர்கள் சாந்த குமார், கோவிந்தராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.






