என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை"

    • அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 50 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
    • அணையின் 8 பிரதான மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கர்நாடகா மாநிலம் பெங்களூர் மற்றும் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதி மற்றும் மாவட்டத்தின் பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஓசூர், சூளகிரி மற்றும் வேப்பனபள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் மழை குறைந்ததால், அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது. அதன்படி, நேற்று காலை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு 14,498 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 14,618 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பிற்பகலில் நீர்வரத்து மேலும் குறைந்தது.

    இதையடுத்து பிற்பகல் 1 மணியளவில் அணைக்கு 9140 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 9 கன அடி தண்ணீர், அணையின் 8 பிரதான மதகுகளுக்கும் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 50 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×