என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • 20- க்கும் மேற்பட்ட சிலைகளை கரைத்தனர்.
    • முஸ்லிம்களும், இந்துக்களும் இணைந்து கொண்டாடி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

    சூளகிரி,

    சூளகிரி தாலுகா பேரிகை சுற்றுவட்டாரத்தில் 25-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டு நேற்று 20- க்கும் மேற்பட்ட சிலைகளை கரைத்தனர்.

    பேரிகை பகுதியில் பல ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது முஸ்லிம், இந்துக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டு காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்புடன் விழா நடைபெறுவது வழக்கம்.ஆனால் நேற்று பேரிகை பஜார் பகுதியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை முஸ்லிம்களும், இந்துக்களும் இணைந்து கொண்டாடி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

    இந்த மதநல்லிணக்கம் தொடரவேண்டும் என்று அனைத்து தரப்பினரும் தெரிவித்தனர்.

    • பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
    • கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள வீரப்பநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). ஆட்டோ டிரைவர்.

    இவர் தனது நண்பர்களான சந்திரன்,சரவணன் ஆகியோருடன் பழையபேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகில் நின்று மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சந்திரனும்,சரவணனும் சேர்ந்து மதுபாட்டிலால் மணிகண்டனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மணிகண்டன் தந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரன்,சரவணன் இருவரையும் கைது செய்தனர்.

    • காட்டு யானை ஒன்று அவ்வழியாக வந்தது.
    • ஆக்ரோஷமாக விரட்டி மிதித்து கொன்றது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள நகர கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசப்பா (வயது 60).

    விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென காட்டு யானை ஒன்று அவ்வழியாக வந்தது.

    வெங்கடேசப்பாவை பார்த்த அந்த யானை அவரை ஆக்ரோஷமாக விரட்டி மிதித்து கொன்றது.

    இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிறுத்தை நுழைந்து அங்குள்ள குதிரையை கடித்து கொன்றுவிட்டு சென்றது .
    • 20 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா வனப்பகுதியில் இருக்கும் சிறுத்தைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி தமிழக எல்லையில் உள்ள கிராமங்களில் அடிக்கடி நுழைவது வழக்கமாக உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தளி அருகே உள்ள குதிரைப் பண்ணையில் சிறுத்தை நுழைந்து அங்குள்ள குதிரையை கடித்து கொன்றுவிட்டு சென்றது . இந்நிலையில் சூளகுண்டா கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (வயது 50) என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    நேற்று வனப்பகுதி அருகில் மேய்த்துவிட்டு இரவு வீட்டின் முன்பு உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றுள்ளார். நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை கிராமத்திற்குள் நுழைந்து பட்டியில் அடைத்திருந்த 20 ஆடுகளை கடித்து குதறி ரத்தத்தை குடித்து சென்றுள்ளது.

    ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு மாதேஷ் வெளியே வந்த பார்த்தபோது பட்டியில் இருந்து 20 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார். இதனை கேட்டு கிராம மக்கள் வெளியே வந்துள்ளனர். அருகில் சிறுத்தையின் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்ட கிராம மக்கள் அலறியடித்து வீட்டிற்குள் சென்று பதுங்கிகொண்டனர்.

    சிறிது நேரம் கழித்து சிறுத்தையின் உறுமல் சத்தம் நின்றுவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனசரகர் சுகுமார் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த ஆடுகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சிறுத்தை யை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டு விடுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மக்கள் வெளியே வரவேன்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

    • அக்கம்பக்கத்தினரிடம் தவறான தகவல் பரப்பியதாக கூறப்படுகிறது.
    • மன வேதனை யடைந்த லாவண்யா விஷம் குடித்தார்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே மத்திகிரி குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணப்பா (42), இவர் புத்தக கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி லாவண்யா (30).

    இந்தநிலையில், லாவண்யாவுக்கும், வேறொரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக அவரது தோழி லகுமம்மா என்பவர், அக்கம்பக்கத்தினரிடம் தவறான தகவல் பரப்பியதாக கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனை யடைந்த லாவண்யா விஷம் குடித்தார். அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையிலும் பின்னர் தனியார் மருத்து வமனையிலும் சேர்த்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, மத்திகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • “நான் முதல்வன் திட்டம்” குறித்த புத்தொளி பயிற்சி நடந்தது.
    • பணிவாய்ப்புகள் குறித்து பயிற்சி அளித்து, சிறப்புரையாற்றினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி திருவள்ளுவர் அரங்கத்தில், "நான் முதல்வன் திட்டம்" குறித்த புத்தொளி பயிற்சி நடந்தது.

    இந்த பயிற்சியை கல்லூரி முதல்வர் அனுராதா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.இதில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயிற்றுனர் கார்த்திகேயன் பங்கேற்று, வங்கி நிதிச் சேவை மற்றும் காப்பீட்டுச் சேவை நிறுவனங்களில் பணிவாய்ப்புகள் குறித்து பயிற்சி அளித்து, சிறப்புரையாற்றினார்.

    இதில், கல்லூரி பேராசிரி யர்கள் வெங்கடேசன், ரவி, கிளாட்சன் ஜோஸ், பாலமுருகன், சிலம்பரசன், பீமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த பயிற்சியில் கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு படிக்கும் 700 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் குமரன் செய்திருந்தார்.

    • தொடர் மழை காரணமாக சின்னவெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஓசூர் :

    ஓசூர் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள், பல ஏக்கர் பரப்பளவில் காய்கறிகள், கீரைகள் பயிரிட்டு வருகின்றனர். மேலும். மருத்துவ குணம் கொண்ட வெள்ளரி மற்றும் சிறிய வெங்காயம் ஆகியவற்றையும் விவசாயிகள் விளைவித்து ஏற்றுமதி செய்து வருகின்றனர். ஓசூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சின்னவெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இந்த நிலையில், ஓசூர் அருகே சானமாவு கிராமத்தை சேர்ந்த விவசாயி அனில்குமார் 5 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்திருந்தார். அறுவடை செய்யும் நேரத்தில், கனமழை பெய்ததால் வியாபாரிகள் வாங்கி செல்ல முன்வரவில்லை. இதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் 700 மூட்டை சின்ன வெங்காயத்தை நேற்று டிராக்டரில் ஏற்றிச்சென்று அவருடைய நிலத்தில் உள்ள தண்ணீர் குட்டையில் கொட்டி அழித்தார்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பொதுவாக 50 கிலோ சின்ன வெங்காயம் கொண்ட ஒரு மூட்டை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு மூட்டை ரூ.500 முதல் ரூ.750 வரை விற்கப்படுகிறது. ஆனால் இந்த வெங்காயத்தையும் வாங்கி செல்ல வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் என்று கூறினர்.

    • இவர்கள் வளர்த்து வந்த ஆடு செல்வியின் வீட்டு தோட்டத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது.
    • ஆத்திரமடைந்த கணவன்,மனைவி இருவரும் செல்வியை கற்களால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஆம்பள்ளி ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி செல்வி (வயது 42).

    இதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்.இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்கள் வளர்த்து வந்த ஆடு செல்வியின் வீட்டு தோட்டத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த ஆட்டை செல்வி கட்டிப்போட்டு வைத்துள்ளார். இது பற்றி அறிந்த நாகராஜும் அவரது மனைவி ராஜேஸ்வரியும் செல்வியின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது ஆத்திரமடைந்த கணவன்,மனைவி இருவரும் செல்வியை கற்களால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    இதில் படுகாயமடைந்து பர்கூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ள செல்வி தந்த புகாரின்பேரில் மத்தூர் போலீசார் நாகராஜ், ராஜேஸ்வரி 2 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • சிறுவனை குண்டுக்கட்டாக பள்ளியின் கழிவறைக்குள் தூக்கி சென்று அவனிடம் ஓரினசேர்க்கையில் ஈடுபட முயன்றுள்ளனர்.
    • மர்ம ஆசாமிகள் 2 பேருக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வரும் 12 வயது சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். அப்போது 2 மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர்.

    பின்னர் சிறுவனை குண்டுக்கட்டாக பள்ளியின் கழிவறைக்குள் தூக்கி சென்று அவனிடம் ஓரினசேர்க்கையில் ஈடுபட முயன்றுள்ளனர்.

    ஆனால் அந்த சிறுவன் அலறியபடி அவர்களிடமிருந்து தப்பி ஓடி வந்துவிட்டான். இதையடுத்து அந்த நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். நடந்த சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சிறுவன் கூறியுள்ளான்.

    அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அந்த சிறுவன் தந்த தகவலின் பேரில் வழக்கு பதிந்து சிறுவனிடம் அத்துமீறிய மர்ம நபர்கள் யார் என்று தேடி வருகின்றனர்.

    அரசு பள்ளியில் நடந்த இந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • மின் பழுது காரணமாக அணையின் கதவு இயக்கம் நிறுத்த இயலாத நிலையில் பிரதான கதவின் இரும்பு கயிறு அறுபட்டு அணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • இப்பழுதுகள் 6 முதல் 7 நாட்களுக்குள் சரிசெய்யப்படும்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், மாரம்பட்டி கிராமத்தில் உள்ள பாம்பாறு அணைப் பகுதியில் தொடர் மழை காரணமாக பாம்பாறு அணை 4-வது பிரதான கதவில் ஏற்பட்ட மின் பழுது காரணமாக, பாம்பாறு அணையை மாவட்ட கலெக்டர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    பாம்பாறு அணையில் கடந்த 18.6.2022 அன்று அதன் வெள்ள அபாய நிலையினை எட்டியதால் உபரி நீர் பாம்பாற்றில் தொடர்ச்சியாக திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 31.8.2022 அன்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக பிரதான கதவு 4-ல் உபரி நீர் திறந்து விட பிரதான கதவு இயக்கப்பட்டது.

    அப்போது ஏற்பட்ட மின் பழுது காரணமாக அணையின் கதவு இயக்கம் நிறுத்த இயலாத நிலையில் பிரதான கதவின் இரும்பு கயிறு அறுபட்டு அணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அணைக்கு கீழுள்ள பிரிவு அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றம் தொடர்பான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அணைக்கு 1.9.2022 அன்றைய நிலையில் வினாடிக்கு 2,640 கன அடி தண்ணீர் வீதம் வந்து கொண்டுள்ளது. வினாடிக்கு 3,818 கன அடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து, மதகு சரி செய்ய பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பழுதினை சாpசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பழுதுகள் 6 முதல் 7 நாட்களுக்குள் சரிசெய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்வாய்வின்போது, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறி யாளர் (நீர்வள ஆதாரம்) மணிமோகன், செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, உதவி பொறியாளர்கள் ஜெய குமார், கார்த்திகேயன், வட்டாட்சியர் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்குமரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாநில அளவிலான வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை பயிற்சிகளை நடத்தி வருகின்றன.
    • மின்வாரிய ஊழியர்கள், வருவாய்த்துறையினர் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை பணிகள் போன்ற ஒத்திகை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

     ஓசூர்,

    தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து, மாநில அளவிலான வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை பயிற்சிகளை நடத்தி வருகின்றன.

    அதன் ஒருபகுதியாக கெலவர ப்பள்ளி அணையில் ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழி முன்னி லையில்,

    வெ ள்ளத்தில் சிக்கி யவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்பது, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ க்குழுவினர் சிகிச்சை அழிப்பது, மழைக்கா லங்களில் மரம் முறிந்து, மின் இணைப்புக்கள் துண்டிப்பு போன்ற நேரங்களில் மின்வாரிய ஊழியர்கள், வருவாய்த்துறையினர் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை பணிகள் போன்ற ஒத்திகை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் மற்றும் வருவாய்துறை, மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கே.ஜி.எப். சினிமா பாணியில் செட் போன்று வடிவமைக்கப்பட்டு பழங்கால குகைகள் போல் அரங்குகள் அமைத்து அதன் முகப்பு தோற்றத்தில் பிரம்மாண்டமான காளி சிலை வடிவமைக்கபட்டுள்ளது.
    • தூண்களில் தீபந்தங்கள் எரிவது போல அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    தேன்கனிக்கோட்டை,

    தேன்கனிக் கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகில் ராஜ மார்த்தாண்ட விநாயக பக்த மண்டலி சார்பில் ஆண்டுதோறும் வித்தியாசமான முறையில் சினிமா படபானியில் அரங்குகள் அமைத்து விநாயகர் சிலையை வழிபடுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் நாட்டில் முதன்முதலாக

    கே.ஜி.எப். சினிமா பாணியில் செட் போன்று வடிவமைக்கப்பட்டு பழங்கால குகைகள் போல் அரங்குகள் அமைத்து அதன் முகப்பு தோற்றத்தில் பிரம்மாண்டமான காளி சிலை வடிவமைக்கபட்டும், பெரிய கொட்டும் முரசுகள் அமைத்தும், தூண்களில் தீபந்தங்கள் எரிவது போல அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    பிறகு உள்ளே குகைக்குள் சென்றால் பல வண்ண விளக்குகள் அலங்காரத்தில் கே.ஜி.எப். விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    இந்த பிரம்மாண்டமான சிலையை பொதுமக்கள் நீண்ட வரிசையில் கூட்டம் கூட்டமாக சென்று வியப்புடன் பார்த்து தரிசித்து செல்கின்றனர். மேலும் அரங்க முகப்பு காளி சிலையின் முன் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் ஆர்வத்துடன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த வித்தியாசமான சிலை அமைத்ததற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் விழா குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    மேலும் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் அருகில் இந்து முன்னணி சார்பில் பால விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கும் பக்தர்கள் கூட்டமாக சென்று வணங்கி வழிபட்டு செல்கின்றனர். இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் நாளை சனிக்கிழமை ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைக்கபடுகிறது.

    ×