என் மலர்
நீங்கள் தேடியது "யானை மிதித்து விவசாயி பலி"
- காட்டு யானை ஒன்று அவ்வழியாக வந்தது.
- ஆக்ரோஷமாக விரட்டி மிதித்து கொன்றது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள நகர கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசப்பா (வயது 60).
விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென காட்டு யானை ஒன்று அவ்வழியாக வந்தது.
வெங்கடேசப்பாவை பார்த்த அந்த யானை அவரை ஆக்ரோஷமாக விரட்டி மிதித்து கொன்றது.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






