என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேன்கனிக்கோட்டையில்  வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை  கூட்டம் கூட்டமாக பார்வையிடும் பொதுமக்கள்
    X

    தேன்கனிக்கோட்டையில் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை கூட்டம் கூட்டமாக பார்வையிடும் பொதுமக்கள்

    • கே.ஜி.எப். சினிமா பாணியில் செட் போன்று வடிவமைக்கப்பட்டு பழங்கால குகைகள் போல் அரங்குகள் அமைத்து அதன் முகப்பு தோற்றத்தில் பிரம்மாண்டமான காளி சிலை வடிவமைக்கபட்டுள்ளது.
    • தூண்களில் தீபந்தங்கள் எரிவது போல அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    தேன்கனிக்கோட்டை,

    தேன்கனிக் கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகில் ராஜ மார்த்தாண்ட விநாயக பக்த மண்டலி சார்பில் ஆண்டுதோறும் வித்தியாசமான முறையில் சினிமா படபானியில் அரங்குகள் அமைத்து விநாயகர் சிலையை வழிபடுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் நாட்டில் முதன்முதலாக

    கே.ஜி.எப். சினிமா பாணியில் செட் போன்று வடிவமைக்கப்பட்டு பழங்கால குகைகள் போல் அரங்குகள் அமைத்து அதன் முகப்பு தோற்றத்தில் பிரம்மாண்டமான காளி சிலை வடிவமைக்கபட்டும், பெரிய கொட்டும் முரசுகள் அமைத்தும், தூண்களில் தீபந்தங்கள் எரிவது போல அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    பிறகு உள்ளே குகைக்குள் சென்றால் பல வண்ண விளக்குகள் அலங்காரத்தில் கே.ஜி.எப். விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    இந்த பிரம்மாண்டமான சிலையை பொதுமக்கள் நீண்ட வரிசையில் கூட்டம் கூட்டமாக சென்று வியப்புடன் பார்த்து தரிசித்து செல்கின்றனர். மேலும் அரங்க முகப்பு காளி சிலையின் முன் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் ஆர்வத்துடன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த வித்தியாசமான சிலை அமைத்ததற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் விழா குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    மேலும் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் அருகில் இந்து முன்னணி சார்பில் பால விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கும் பக்தர்கள் கூட்டமாக சென்று வணங்கி வழிபட்டு செல்கின்றனர். இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் நாளை சனிக்கிழமை ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைக்கபடுகிறது.

    Next Story
    ×