என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிங்காரப்பேட்டை அருகே அரசு பள்ளியில் மாணவனை கழிவறைக்கு தூக்கி சென்று ஓரினசேர்க்கையில் ஈடுபட முயற்சி
- சிறுவனை குண்டுக்கட்டாக பள்ளியின் கழிவறைக்குள் தூக்கி சென்று அவனிடம் ஓரினசேர்க்கையில் ஈடுபட முயன்றுள்ளனர்.
- மர்ம ஆசாமிகள் 2 பேருக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வரும் 12 வயது சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். அப்போது 2 மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர்.
பின்னர் சிறுவனை குண்டுக்கட்டாக பள்ளியின் கழிவறைக்குள் தூக்கி சென்று அவனிடம் ஓரினசேர்க்கையில் ஈடுபட முயன்றுள்ளனர்.
ஆனால் அந்த சிறுவன் அலறியபடி அவர்களிடமிருந்து தப்பி ஓடி வந்துவிட்டான். இதையடுத்து அந்த நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். நடந்த சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சிறுவன் கூறியுள்ளான்.
அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அந்த சிறுவன் தந்த தகவலின் பேரில் வழக்கு பதிந்து சிறுவனிடம் அத்துமீறிய மர்ம நபர்கள் யார் என்று தேடி வருகின்றனர்.
அரசு பள்ளியில் நடந்த இந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.