search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவரில் துளைபோட்டு அரசு மதுபான கடையில் ரூ.2.69 லட்சம் பணம் கொள்ளை
    X

    சுவரில் துளைபோட்டு அரசு மதுபான கடையில் ரூ.2.69 லட்சம் பணம் கொள்ளை

    • கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே முகுளப்பள்ளி கேட் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 250 பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
    • கொள்ளை குறித்து பாகலூர் போலீசில் வெங்கடேசப்பா புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே முகுளப்பள்ளி கேட் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக வெங்கடேசப்பா என்பவர் வேலைபார்த்து வருகிறார்.

    கடந்த நேற்று முன்தினம் இரவு வெங்கடேசப்பாவும், விற்பனையாளர் செல்வ குமாரனும் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை மூடிவிட்டுச்சென்றனர். நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் திறந்து கிடந்தது.

    அதிர்ச்சியடைந்த வெங்கடேசப்பா உள்ளே சென்று பார்த்தபோது சுவரில் துளைபோட்டு மது விற்ற தொகை ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 250 பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பாகலூர் போலீசில் வெங்கடேசப்பா புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    Next Story
    ×