என் மலர்
கிருஷ்ணகிரி
- ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ஸ்ரீ ராமருக்கு இங்கு கோவில் அமைக்க உத்தேசித்து,
- ஓசூர் நேதாஜி சாலையில் உள்ள பிரசித்தி பெற்றதும், புகழ் மிக்கதுமான இந்த கோவிலில் உள்ள மூலவர் சீதா லக்ஷ்மண ஹனுமத் சமேதராக கல்யாண கோதண்ட ராமர் ஆக சேவை சாதித்து அருள் பாலிக்கிறார்.
ஓசூர்,
வடக்கில் காசி மாநகருக்கு ஒப்பாக தட்சிணகாசி என்றும் புகழ் பெற்ற சந்திரகிரி என்றழைக்கப்படும் தற்பொழுதைய ஓசூர் மாநகரில் மிகவும் பழமை வாய்ந்த மரகதாம்பிகை உடனுறை சந்திர சூடேஸ்வரர் கோவில் மலை அமைந்துள்ளது.
இந்த கோவிலில் உள்ள சிவபெருமான் ராம நாமத்தின் பெருமையை இந்த உலகிற்கு உணர்த்தும் விதமாக ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ஸ்ரீ ராமருக்கு இங்கு கோவில் அமைக்க உத்தேசித்து, அதன்படி சிவபெருமான் விருப்பத்தினால் அமையப்பெற்ற கோவிலாக இந்த ராமர் கோவில் அமைந்துள்ளது என்று புராணங்கள் வாயிலாக தெரியவரும் சிறப்பு பெற்றது.
ஓசூர் நேதாஜி சாலையில் உள்ள பிரசித்தி பெற்றதும், புகழ் மிக்கதுமான இந்த கோவிலில் உள்ள மூலவர் சீதா லக்ஷ்மண ஹனுமத் சமேதராக கல்யாண கோதண்ட ராமர் ஆக சேவை சாதித்து அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ திருவேங்கடமுடையான், ஸ்ரீ கருடாழ்வார் மற்றும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் தனி சன்னதிகள் கொண்டு அருள் பாலிக்கின்றனர். அத்துடன், ஸ்ரீ அ னுமாரும் ராம நாம வரப்பிரசாதியாக அருள் பாலிக்கிறார்.
தற்போது, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் ேகாவிலில் பல ஆண்டுகளாக நடந்து வந்த புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று கோவிலில் விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆகியன யாகசாலைகளில் பூரண கும்ப கலசங்கள் மற்றும் அவற்றுள் புனித நீரும் வைத்து பூஜிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பட்டாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களில் உள்ள புனித நீரை கோபுர கலசங்களில் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.
தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மகாதீபாராதனை செய்யப்பட்டது. மேலும் உற்சவ மூர்த்தி, கோவிலை சுற்றி வலமாக அழைத்து செல்லப்பட்டார்.
விழாவில் ஓசூர் பகுதி மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் விழாவில் ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மற்றும் மாநகர காங்கிரஸ் தலைவர் நீலகண்டன் ஆகியோரும் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை தர்மகர்த்தாக்களான ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத் மற்றும் ஜெய்சங்கர் குடும்பத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் செய்திருந்தனர்.
- ஆழ்த்துளை கிணற்றின் இரும்பு பைப்புகளை மர்ம நபர்கள் திருடி கொண்டிருந்தனர்.
- பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள பெருகோபனபள்ளி ஊராட்சி ஆண்டிகானூர் பகுதியில் ஆழ்த்துளை கிணற்றின் இரும்பு பைப்புகளை மர்ம நபர்கள் திருடி கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை மத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் கரடிகொல்லப்பட்டியை சேர்ந்த முருகன், நந்தகிஷோர் ஆகியோர் என்பது தெரியவந்தது. உடனே அவர்களை கைது செய்தனர்.
- இரவு பெரியமொய் சுவாமிக்கு புன்னியதானம் அபிஷேகமும், சேவாட்ட வரவு வேடிக்கையும் நடைபெற்றன.
- சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியில் வீரபத்திர சுவாமி கோவில், கும்பாபிஷேக விழா மிக விமர்சியாக நடைபெற்றது.
முன்னதாக சுவாமிக்கு சந்தூர் பகுதியில் இருந்து ஈச்சங்காடு பகுதிக்கு கங்கை பூஜை செய்து கால்நடையாக சுமந்து கோவிலை வந்தடைந்தன.
செவ்வாய் கிழமை அன்று இரவு பெரியமொய் சுவாமிக்கு புன்னியதானம் அபிஷேகமும், சேவாட்ட வரவு வேடிக்கையும் நடைபெற்றன. புதன்கிழமை காலை சித்தப்பசுவாமி மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்கார தீபாரதனையுடன் தலைமுடி வாங்குதல் மற்றும் தலை மீது தேங்காய் உடைத்தலுடன் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது .
இதனையடுத்து வீரபத்திர சுவாமி மற்றும் நந்தீஸ்வரருக்கு அஷ்டபந்தன கணபதி ஹோமகுண்ட சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றன. விழாவினை தொடர்ந்து கோவில் வளாகத்தில் குலவழக்க சேவாட்ட சிறப்பு நடத்துடன் பூசாரி முதலில் காளை மாட்டின் தலை மீதும், ஆட்டுகடாவின் தலை மீதும் தேங்காய் உடைத்தும், விரதம் இருந்த ஆண் பெண், இளைஞர்கள் ஆகிய பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். இத்துடன் பக்தர்கள் கரகம் எடுத்து தலை கூடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இவ்விழானை சந்தூர், வெப்பாலம்பட்டி, மங்கல்பட்டி, ஈச்சங்காடு உள்ளிட்ட 65 கிராமங்களை குலதெய்வ கோவிலுக்கு சொந்தமான பங்குதாரர்கள் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அத்துடன் இரவு முதல் காலை வரை 50 க்கும் மேற்பட்ட உணவக பந்தல் அமைத்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாக்கள், முக்கிய கோவிலின் முக்கியஸ்தர்கள், நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்.
- இருவரும் வீட்டின் அருகே சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்தனர்.
- எதிர்பாராத விதமாக ஊஞ்சல் கட்டிய சேலையில் எஸ்வந்து கழுத்துப்பகுதி மாட்டி கொண்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி அம்சவேணி. இவர்களுக்கு எஸ்வந்த் (7), அபிதா (4) ஆகிய இருக்குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் வீட்டின் அருகே சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஊஞ்சல் கட்டிய சேலையில் எஸ்வந்து கழுத்துப்பகுதி மாட்டி கொண்டது. இதில் மயங்கிய நிலையில் அந்த சிறுவன் இருந்தார்.
இதனை பார்த்த தாய் ஓடி வந்து மகனை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்றுள்ளார்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டாதாக கூறியுள்ளார். இதைதொடர்ந்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துமனையில் அனுமதிக்கபட்டுள்ளது.
இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
- 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மாவட்ட தொழில் மையத்தினை அணுகி பயன்பெறலாம்.
கிருஷ்ணகிரி,
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகைள், மானியத்துடன் கூடிய கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு, ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு புதியதாக தொழில் தொடங்க ஆவண செய்யும் வகையில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற மானியத்துடன் கூடிய திட்டத்தினை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் வியாபார தொழில்களுக்கு ரு.5 லட்சம் வரை வங்கிகளின் மூலம் கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். மேலும், விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.5 லட்சம் ஆகும். தற்போது தமிழக அரசு மேற்கொண்ட இத்திட்டத்தின் படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆட்டிசம் பாதிப்பு மற்றும் அறிவுசார் இயலாமை பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பினை 55 ஆக உயர்த்தியும், கல்வி தகுதி தேவையில்லை எனவும் கடந்த 18-ந் தேதியன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர் இணைதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்க லாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆர்வமுள்ள மாற்றுத்தி றனாளி மற்றும் ஆட்டிசம் பாதிப்பு மற்றும் அறிவுசார் இயலாமை பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் புதிய சலுகைகளுடன் கூடிய இத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெற்று, சுய தொழில் துவங்கி பயனடைய கேட்டுக்கொள்கிறேன். மேலும், விவரங்களுக்கு கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட தொழில் மையத்தினை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
- இதில் பிளஸ்-2 துணை தேர்வில் தேர்ச்சிப் பெற்று மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு கலை கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-
கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை, இளமறிவியல் பாடப்பிரிவுகளில், மாணவ, மாணவிகள் சேர்க்க்கான பொது கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் பிளஸ்-2 துணை தேர்வில் தேர்ச்சிப் பெற்று மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். அரசு அறிவித்துள்ளவாறு 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கை, இக்கலந்தாய்வில் இருப்பதாலும் அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம்.
கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள், பிளஸ்-2 துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தவிர, ஏற்கனவே இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், மாற்றுச்சான்றிழ் (அசல்), மதிப்பெண் பட்டியல்கள் 10, 11, 12-ஆம் வகுப்பு அசல் சான்றிழ்கள், சாதிச்சான்றிதழ் (நகல்), சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 4, ஆதார் அட்டை(நகல்), வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் 3 நகல்கள் கொண்டு வரவும். மேலும், இக்கல்லூரியில் காலியாக உள்ள பி.சி. பிரிவு மாணவர்களுக்கான இடங்களுக்கு நேரடியாக விண்ணப்பம் பெற்று கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா நேற்று மாலை நடந்தது.
- ரூ.18 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்வி விழா நேற்று மாலை நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை தாங்கினார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேசியதாவது:-
தமிழக அரசு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மக்களுக்கு தையல் எந்திரங்கள், 4 சக்கர தள்ளு வண்டிகள், சிறுதொழில் செய்வதற்காக நலத்திட்ட உதவிகள், சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், உலமாக்களுக்கு மிதிவண்டிகள் வழங்குதல் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி இன்று நடந்த நிகழ்ச்சியில், மாவட்டத்திலுள்ள 358 உலமாக்கள், பணியாளர்கள் மற்றும் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.18 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதே போல், மாவட்டத்தில் 2022&-23&ம் ஆண்டில் சிறுதொழில் செய்வதற்காக 118 முஸ்லிம் பெண்களுக்கு ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
2022-23 ம் ஆண்டில் 157 கிறித்துவ பெண்கள் சிறுதொழில் செய்வதற்காக ரூ.18 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்று, தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்த நிகழச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டு வன், முருகன், நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, தாசில்தார் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 19 ஆயிரத்து 478 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
- இதனால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி
தொடர் கன மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி அணையில் இருந்து 19 ஆயிரத்து 478 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பெய்த கனமழையாலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 3,549 கனஅடியாக நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 9,215 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.75 அடியாக இருந்தது. இதனால் அணையில் 6 மதகுகள் வழியாக வினாடிக்கு 8200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும், கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், 11 தடுப்பணைகளை கடந்து பிற்பகல் 1 மணியளவில், கிருஷ்ணகிரி அணைக்கு வந்தது.
இதனால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க தொடங்கியது. அதன்படி பிற்பகல் 2 மணியளவில், அணைக்கு நீர்வரத்து 16 ஆயிரத்து 454 கனஅடியாகவும், நீர்மட்டம் 50.80 அடியாக இருந்ததால், 8 மதகுகள் வழியாக வினாடிக்கு 19 ஆயிரத்து 478 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் ெவள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் சீறி பாய்ந்து சென்றது.
கிருஷ்ணகிரி அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் முற்றிலும் மூழ்கி உள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 10-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது. மேலும், காவேரிப்பட்டணம், பென்னேஸ்வர மடம், நெடுங்கல் உட்பட தென்பெண்ணை ஆறு கடந்து செல்லும் கிராம மக்களுக்கு தொடர்பு ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாரும் தென்பெண்ணை ஆற்றங்கரை அருகில் வர வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
மேலும், ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தென்பெண்ணை ஆற்றின் மறுகரை வரை மேம்பாலம் அமைக்க வேண்டும்.
- அசோக்குமார் எம்.எல்.ஏ. மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, வேப்பப்பள்ளி மற்றும் ஊத்தங்கரை ஆகிய 3 சட்டசபைத் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், தனித்தனியாக, 10 அம்ச கோரிக்கை மனுவை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் மனுவாக அளித்தனர்.
கிருஷ்ணகிரி அசோக்குமார் எம்.எல்.ஏ. மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-
கும்மனூர் கிராமத்திலிருந்து தென்பெண்ணை ஆற்றின் மறுகரை வரை மேம்பாலம் அமைக்க வேண்டும், கிருஷ்ணகிரி நகராட்சியில் தினசரி சந்தைக்கு இடம் ஒதுக்கி, நிரந்தர காய்கறி சந்தை அமைக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றிலிருந்து கருமலை குட்டை, பாண்டவர் குட்டை, ஒட்டப்பட்டி ஏரிகளை இணைக்கும் வகையில் வழங்கு கால்வாய் அமைக்க வேண்டும்.
மேலும் ஆலப்பட்டி ஊராட்சி நக்கல்பட்டி கிராமத்தில் பொதுப்பணித்து றைக்கு சொந்தமான ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும், படேதலாவ் ஏரியிலிருந்து வரும் உபரி நீர் செல்லும் கால்வாயின் இருபுறமும், 7 கிலோ மீட்டர் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும், கெலமங்கலம் ஒன்றியம் கொப்பக்கரை ஊராட்சி பால்னாம்ப்டி ஏரியிலிருந்து சிக்கப்பூவத்தி, ஆலப்பட்டி, வெலகலஹள்ளி, மோரமடுகு ஆகிய ஊராட்சிகள் வழியாக பாசன கால்வாய் அமைக்க வேண்டும்.
தனியார் கட்டத்தில் இயங்கும் கிருஷ்ணகிரி நகராட்சி உருது நடுநிலை பள்ளிக்கு இடம் ஒதுக்கி கட்டிடம் கட்டித்தர வேண்டும். வேப்பனப்பள்ளி அருகில் படேதாள தடுப்பணை வலது கால்வாயிலிருந்து புளியஞ்சேரி குப்பச்சிப்பாறை வழியாக தடுப்பணை அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாழ்த்து அட்டை, பூங்கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கி பேசினார்.
- விழாவின் முடிவில் முதல்வர் விஜயகுமார் நன்றி கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கிருஷ்ணவேணி மணி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
பள்ளியின் நிறுவனர் மணி தலைமை தாங்கி, அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்து அட்டை, பூங்கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கி பேசினார்.
அவர் பேசும் போது டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு குறித்தும், அவர் ஆசிரியராக தனது பணியை தொடங்கி உழைப்பால் எவ்வாறு குடியரசு தலைவராக உயர்ந்தார் என விளக்கி பேசினார். அதே போல எதிர்கால சமுதாயத்திற்கு ஆசிரியர்கள் செய்ய வேண்டிய சேவை குறித்து விளக்கி பேசினார்.
தொடர்ந்து ஆசிரியர்க ளுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் மூர்த்தி முதல் பரிசும், அருண்பிரசாத் 2-ம் பரிசும், செல்வராஜ் 3-ம் பரிசும் பெற்றனர்.
ஆசிரியைகளுக்கான விளையாட்டு போட்டியில் சிந்து முதல் பரிசும், நசீமா பேகம் 2-ம் பரிசும், அம்ரீன் 3-ம் பரிசும் பெற்றனர்.
இந்த விழாவில் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சந்தோஷ் ஆசிரி யர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார். விழாவின் முடிவில் முதல்வர் விஜயகுமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் நசீர் பாஷா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.
- ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
- துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகள் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது- இதற்கு கல்வி நிறுவ னங்களின் தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரியின் தலைவரும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான வள்ளி பெருமாள் முன்னிலை வகித்தார்.
பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் அனைவரையும் வரவேற்றார். கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஆறுமுகம் தனது வாழ்த்துரையில், அனைத்து பேராசிரியர்களும் தங்க ளின் பொறுப்புகளை உணர்ந்து அர்ப்பணிப்பு எண்ணத்துடன் பணி யாற்றிட வேண்டும்.
அவ்வப்போது ஏற்படும் தொழில் நுட்ப மாற்றங்களை கற்று மாணவர்களுக்கு புதிய முறையில் கல்வி கற்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஆசிரியர் தினத்தை யொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு களும், அனைத்து ஆசிரி யர்களுக்கும் நினைவு பரிசுகளை கல்லூரியின் தலைவர் வள்ளி பெருமாள் வழங்கினார். இதில் கல்லூரி நிர்வாக அலுவலர் சுரேஷ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
- தலைமைச்செயல கத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் ஊத்தங்கரையில், வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், ரூ. 4 கோடியே 40 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதனை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச்செயல கத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஓசூரில் புதிய கட்டிடத்தில், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி குத்து விளக்கேற்றி வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.6,350- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு, ஓசூர் எம்.எல்.ஏ.ஒய். பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணைமேயர் ஆனந்தய்யா, வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துறை துணை இயக்குனர் ராம்பிர சாத், உதவி இயக்குனர் புவனேஸ்வரி, ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, துணைத்தலைவர் நாராய ணசாமி, வேளாண்மைத் துறை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






