என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர், ஊத்தங்கரையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம் திறப்பு -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
- வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
- தலைமைச்செயல கத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் ஊத்தங்கரையில், வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், ரூ. 4 கோடியே 40 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதனை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச்செயல கத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஓசூரில் புதிய கட்டிடத்தில், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி குத்து விளக்கேற்றி வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.6,350- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு, ஓசூர் எம்.எல்.ஏ.ஒய். பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணைமேயர் ஆனந்தய்யா, வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துறை துணை இயக்குனர் ராம்பிர சாத், உதவி இயக்குனர் புவனேஸ்வரி, ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, துணைத்தலைவர் நாராய ணசாமி, வேளாண்மைத் துறை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






