என் மலர்
நீங்கள் தேடியது "அசோக்குமார் எம்.எல்.ஏ. மனு"
- தென்பெண்ணை ஆற்றின் மறுகரை வரை மேம்பாலம் அமைக்க வேண்டும்.
- அசோக்குமார் எம்.எல்.ஏ. மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, வேப்பப்பள்ளி மற்றும் ஊத்தங்கரை ஆகிய 3 சட்டசபைத் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், தனித்தனியாக, 10 அம்ச கோரிக்கை மனுவை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் மனுவாக அளித்தனர்.
கிருஷ்ணகிரி அசோக்குமார் எம்.எல்.ஏ. மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-
கும்மனூர் கிராமத்திலிருந்து தென்பெண்ணை ஆற்றின் மறுகரை வரை மேம்பாலம் அமைக்க வேண்டும், கிருஷ்ணகிரி நகராட்சியில் தினசரி சந்தைக்கு இடம் ஒதுக்கி, நிரந்தர காய்கறி சந்தை அமைக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றிலிருந்து கருமலை குட்டை, பாண்டவர் குட்டை, ஒட்டப்பட்டி ஏரிகளை இணைக்கும் வகையில் வழங்கு கால்வாய் அமைக்க வேண்டும்.
மேலும் ஆலப்பட்டி ஊராட்சி நக்கல்பட்டி கிராமத்தில் பொதுப்பணித்து றைக்கு சொந்தமான ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும், படேதலாவ் ஏரியிலிருந்து வரும் உபரி நீர் செல்லும் கால்வாயின் இருபுறமும், 7 கிலோ மீட்டர் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும், கெலமங்கலம் ஒன்றியம் கொப்பக்கரை ஊராட்சி பால்னாம்ப்டி ஏரியிலிருந்து சிக்கப்பூவத்தி, ஆலப்பட்டி, வெலகலஹள்ளி, மோரமடுகு ஆகிய ஊராட்சிகள் வழியாக பாசன கால்வாய் அமைக்க வேண்டும்.
தனியார் கட்டத்தில் இயங்கும் கிருஷ்ணகிரி நகராட்சி உருது நடுநிலை பள்ளிக்கு இடம் ஒதுக்கி கட்டிடம் கட்டித்தர வேண்டும். வேப்பனப்பள்ளி அருகில் படேதாள தடுப்பணை வலது கால்வாயிலிருந்து புளியஞ்சேரி குப்பச்சிப்பாறை வழியாக தடுப்பணை அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






