என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகைகள், மானியத்துடன் கடனுதவி  -கிருஷ்ணகிரி கலெக்டர் தகவல்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகைகள், மானியத்துடன் கடனுதவி -கிருஷ்ணகிரி கலெக்டர் தகவல்

    • 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • மாவட்ட தொழில் மையத்தினை அணுகி பயன்பெறலாம்.

    கிருஷ்ணகிரி,

    படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகைள், மானியத்துடன் கூடிய கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு புதியதாக தொழில் தொடங்க ஆவண செய்யும் வகையில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற மானியத்துடன் கூடிய திட்டத்தினை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் வியாபார தொழில்களுக்கு ரு.5 லட்சம் வரை வங்கிகளின் மூலம் கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். மேலும், விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.5 லட்சம் ஆகும். தற்போது தமிழக அரசு மேற்கொண்ட இத்திட்டத்தின் படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆட்டிசம் பாதிப்பு மற்றும் அறிவுசார் இயலாமை பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பினை 55 ஆக உயர்த்தியும், கல்வி தகுதி தேவையில்லை எனவும் கடந்த 18-ந் தேதியன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர் இணைதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்க லாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆர்வமுள்ள மாற்றுத்தி றனாளி மற்றும் ஆட்டிசம் பாதிப்பு மற்றும் அறிவுசார் இயலாமை பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் புதிய சலுகைகளுடன் கூடிய இத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெற்று, சுய தொழில் துவங்கி பயனடைய கேட்டுக்கொள்கிறேன். மேலும், விவரங்களுக்கு கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட தொழில் மையத்தினை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    Next Story
    ×