search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில்  4-ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை நடக்கிறது
    X

    கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் 4-ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை நடக்கிறது

    • நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
    • இதில் பிளஸ்-2 துணை தேர்வில் தேர்ச்சிப் பெற்று மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு கலை கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

    கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை, இளமறிவியல் பாடப்பிரிவுகளில், மாணவ, மாணவிகள் சேர்க்க்கான பொது கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் பிளஸ்-2 துணை தேர்வில் தேர்ச்சிப் பெற்று மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். அரசு அறிவித்துள்ளவாறு 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கை, இக்கலந்தாய்வில் இருப்பதாலும் அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம்.

    கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள், பிளஸ்-2 துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தவிர, ஏற்கனவே இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், மாற்றுச்சான்றிழ் (அசல்), மதிப்பெண் பட்டியல்கள் 10, 11, 12-ஆம் வகுப்பு அசல் சான்றிழ்கள், சாதிச்சான்றிதழ் (நகல்), சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 4, ஆதார் அட்டை(நகல்), வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் 3 நகல்கள் கொண்டு வரவும். மேலும், இக்கல்லூரியில் காலியாக உள்ள பி.சி. பிரிவு மாணவர்களுக்கான இடங்களுக்கு நேரடியாக விண்ணப்பம் பெற்று கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×