கிருஷ்ணா கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தின விழா

ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணா கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தின விழா
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகள் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது- இதற்கு கல்வி நிறுவ னங்களின் தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரியின் தலைவரும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான வள்ளி பெருமாள் முன்னிலை வகித்தார்.

பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் அனைவரையும் வரவேற்றார். கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஆறுமுகம் தனது வாழ்த்துரையில், அனைத்து பேராசிரியர்களும் தங்க ளின் பொறுப்புகளை உணர்ந்து அர்ப்பணிப்பு எண்ணத்துடன் பணி யாற்றிட வேண்டும்.

அவ்வப்போது ஏற்படும் தொழில் நுட்ப மாற்றங்களை கற்று மாணவர்களுக்கு புதிய முறையில் கல்வி கற்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஆசிரியர் தினத்தை யொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு களும், அனைத்து ஆசிரி யர்களுக்கும் நினைவு பரிசுகளை கல்லூரியின் தலைவர் வள்ளி பெருமாள் வழங்கினார். இதில் கல்லூரி நிர்வாக அலுவலர் சுரேஷ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com