என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈச்சங்காடு பகுதியில் நடைபெற்ற வீரபத்திர சுவாமி கோவில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் மீது தேங்காய் உடைக்கப்பட்ட காட்சி.
ஈச்சங்காடு வீரபத்திர சுவாமி கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்தி கடன்
- இரவு பெரியமொய் சுவாமிக்கு புன்னியதானம் அபிஷேகமும், சேவாட்ட வரவு வேடிக்கையும் நடைபெற்றன.
- சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியில் வீரபத்திர சுவாமி கோவில், கும்பாபிஷேக விழா மிக விமர்சியாக நடைபெற்றது.
முன்னதாக சுவாமிக்கு சந்தூர் பகுதியில் இருந்து ஈச்சங்காடு பகுதிக்கு கங்கை பூஜை செய்து கால்நடையாக சுமந்து கோவிலை வந்தடைந்தன.
செவ்வாய் கிழமை அன்று இரவு பெரியமொய் சுவாமிக்கு புன்னியதானம் அபிஷேகமும், சேவாட்ட வரவு வேடிக்கையும் நடைபெற்றன. புதன்கிழமை காலை சித்தப்பசுவாமி மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்கார தீபாரதனையுடன் தலைமுடி வாங்குதல் மற்றும் தலை மீது தேங்காய் உடைத்தலுடன் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது .
இதனையடுத்து வீரபத்திர சுவாமி மற்றும் நந்தீஸ்வரருக்கு அஷ்டபந்தன கணபதி ஹோமகுண்ட சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றன. விழாவினை தொடர்ந்து கோவில் வளாகத்தில் குலவழக்க சேவாட்ட சிறப்பு நடத்துடன் பூசாரி முதலில் காளை மாட்டின் தலை மீதும், ஆட்டுகடாவின் தலை மீதும் தேங்காய் உடைத்தும், விரதம் இருந்த ஆண் பெண், இளைஞர்கள் ஆகிய பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். இத்துடன் பக்தர்கள் கரகம் எடுத்து தலை கூடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இவ்விழானை சந்தூர், வெப்பாலம்பட்டி, மங்கல்பட்டி, ஈச்சங்காடு உள்ளிட்ட 65 கிராமங்களை குலதெய்வ கோவிலுக்கு சொந்தமான பங்குதாரர்கள் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அத்துடன் இரவு முதல் காலை வரை 50 க்கும் மேற்பட்ட உணவக பந்தல் அமைத்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாக்கள், முக்கிய கோவிலின் முக்கியஸ்தர்கள், நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்.






