என் மலர்
உள்ளூர் செய்திகள்

பர்கூர் அருகே ஆழ்துளை கிணற்றில் இரும்பு பைப்புகள் திருடிய 2 பேர் கைது
- ஆழ்த்துளை கிணற்றின் இரும்பு பைப்புகளை மர்ம நபர்கள் திருடி கொண்டிருந்தனர்.
- பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள பெருகோபனபள்ளி ஊராட்சி ஆண்டிகானூர் பகுதியில் ஆழ்த்துளை கிணற்றின் இரும்பு பைப்புகளை மர்ம நபர்கள் திருடி கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை மத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் கரடிகொல்லப்பட்டியை சேர்ந்த முருகன், நந்தகிஷோர் ஆகியோர் என்பது தெரியவந்தது. உடனே அவர்களை கைது செய்தனர்.
Next Story






