என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.
    • கெலமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் யாரும் காணாமல் போய் உள்ளார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே பேவநத்தம் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் வனப்பகுதியில் சிலர் கால்நடைகளை மேய்ப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை அவர்கள் கால்நடைகளை மேய்க்க சென்றனர்.

    அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அவர்கள் அந்த பகுதியில் சென்று பார்த்தபோது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து கெலமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டனர்.

    மேலும் சிறிது தூரத்தில் வீசப்பட்டிருந்த அந்த பெண்ணின் தலையும் கண்டெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பெண்ணின் உடல் மற்றும் தலையை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

    அந்த இடத்தில் கொலை நடந்ததா? அல்லது வேறு எங்கும் கொலை செய்து விட்டு இங்கு வந்து உடல், தலையை போட்டு சென்றார்களா? என போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    கெலமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் யாரும் காணாமல் போய் உள்ளார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மாதேஸ்வரன் கோவையிலிருந்து அருள்நாதபுரம் சென்றால்தான் இந்த கிராம மக்கள் சாலையை பார்க்க முடியும்.
    • பிழைப்புக்காக வெளியூர்களில் மக்கள் தஞ்சம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள மடக்கால் பஞ்சாயத்துக்கு உள்பட்டது மாதேஸ்வரன் கோவை மலைப்பகுதி.

    சுமார் 40 பேருக்கு மேல் குடும்பங்களாக வசித்து வந்த இந்த கிராமத்தில் தற்போது காலியாக உள்ள வீடுகளையும், விளைச்சல் நிலங்களில் புல்பூண்டுகள் முளைத்துள்ளதையும் மட்டுமே காணமுடிகிறது.

    மருத்துவ வசதி, உயர்கல்வி உள்பட அடிப்படை தேவைகள் அனைத்திற்கும் இந்த கிராமத்திலிருந்து வெளியே செல்ல ஒழுங்கான சாலை வசதி இல்லாமல் போனதே இதற்கு முழு காரணமாக கூறப்படுகிறது.

    மாதேஸ்வரன் கோவையிலிருந்து அருள்நாதபுரம் சென்றால்தான் இந்த கிராம மக்கள் சாலையை பார்க்க முடியும்.

    இதையடுத்து இந்த மலை கிராமத்தில் வசித்து வந்த மக்கள் ஜவளகிரி ,அஞ்செட்டி, மிலிடிக்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டனர்.

    மேலும் பலர் பிழைப்புக்காக கர்நாடக மாநிலத்துக்கும், சிலர் வெளி மாவட்டங்களுக்கும் சென்று விட்டதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

    சொந்த வீடுகள், விவசாய நிலங்களை விட்டுவிட்டு வெளியூர்களுக்கு சென்று வாடகை வீட்டில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர்,பஞ்சாயத்து நிர்வாகம் என்று பல இடங்களில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் எவ்வித பலனும் இன்றி மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.தற்போது மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    தீர்வு கிடைக்குமா? என்று காத்திருக்கின்றனர் மாதேஸ்வரன் கோவை மக்கள்.

    • அரசு சார்பில் மாணவிகள் விடுதி தொடங்க அரசு உத்தரவிடப்பட்டது.
    • கழிவறை வசதிகள் உள்ளதா எனவும் ஆய்வு செய்து மாணவிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி சுற்று வட்டார பகுதிகளில் பள்ளி இடை நின்றலை தடுக்கவும், தொடர்ந்து உயர்நிலை, மேல்நிலை கல்வி கற்கவும், குழந்தை திருமணம் தடுக்கவும், அரசு சார்பில் மாணவிகள் விடுதி தொடங்க அரசு உத்தரவிடப்பட்டது.

    இந்த விடுதியில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு வரை 50 மாணவிகள் தங்கி கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாணவிகள் விடுதியை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாணவிகள் தங்கும் விடுதியில் அறைகளையும், பாதுகாப்பு மற்றும் கழிவறை வசதிகள் உள்ளதா எனவும் ஆய்வு செய்து மாணவிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் வடிவேல், தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சீனிவாசன், நாகராஜ், தேன்கனிக்கோட்டை மாவட்ட துணை ஆய்வாளர் சுரேஷ்பாபு ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், சர்தார், சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 9-ம் தேதி தனது பெரியப்பா வீட்டிற்கு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை அடுத்த பஞ்சப்பள்ளி அருகேயுள்ள கங்கபாளையத்தைச் சேர்ந்தவர் பட்டம்மாள். இவரது 17 வயது மகள் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த 9-ம் தேதி தனது பெரியப்பா வீட்டிற்கு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த தாயார் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில் அவரது தாயார் பஞ்சப்பள்ளி போலீசாரிடம் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் நாைள சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் நாைள சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    அதனால் சூளகிரி நகர், உலகம், மாதரசனபள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, செம்ப ரசனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி, காமன் தொட்டி, கோனே ரிப் பள்ளி, பாத்தகொட்டாய், பஸ்த லப்பள்ளி, எர்ரண்டப் பள்ளி, பேடப்பள்ளி, சென்னப்பள்ளி, மேடுப்பள்ளி, தியாகர சனப்பள்ளி, பங்காநத்தம் ஆகிய பகுதிகளுக்கும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. அரசு வந்த 15 மாதங்களில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
    • அ.தி.மு.க. அரசு மக்களுக்காக கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 15 மாதங்களில் நிறுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தி.மு.க. அரசு வந்த 15 மாதங்களில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    அ.தி.மு.க. அரசு மக்களுக்காக கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 15 மாதங்களில் நிறுத்தியுள்ளது.

    உதாரணமாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், கிராமப்புறங்களில் பெண்களை மேம்படுத்த ஆடு, மாடு, கோழிகள் வழங்கும் திட்டம், சுகாதாரத்துறையில் மினி கிளினிக் திட்டம் என பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது.

    இப்படி இருக்கும் பட்சத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் இனிவரும் காலங்களில் தி.மு.க. தான் ஆட்சியில் இருக்கும் என இறுமாப்புடன் பேசி வருகிறார். அவருக்கு இந்த ஆர்ப்பாட்டம் காதுகளில் இடியாக விழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கட்டிடத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி கொளஞ்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    திருவண்ணாமலை மாவட்டம், மூங்கில்துறைபட்டு பகுதியை சேர்ந்தவர் கொளஞ்சியம்மாள் (வயது55).

    இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஓசூர் கும்பாரபேட்டை பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தார்.

    அப்போது கட்டிடத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கொளஞ்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேப்பனப்பள்ளி போலீசார் நகரத்தின் மையத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்ததால் இப்பகுதியில் வாகன ஓட்டிகள் வேகமாக ஓட்டுவது குறைந்துள்ளது.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு என மூன்று மாநில எல்லைகள் உள்ளதால் இப்பகுதியில் இருசக்கர வாகன திருட்டு, அண்டை மாநிலங்களிலிருந்து கஞ்சா இறக்குமதி செய்தல், இளைஞர்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் உத்தரவின் பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் நகரத்தின் மையத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் சந்தேகத்திற்கு உரிய வகையில் வரும் நபர்களை சோதனை செய்து அவர்களின் ஆவணங்களை பரிசோதித்தனர். மேலும் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்ததால் இப்பகுதியில் வாகன ஓட்டிகள் வேகமாக ஓட்டுவது குறைந்துள்ளது.

    இதனால் இப்பகுதி பொதுமக்கள் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர். மேலும் இது போன்று அடிக்கடி வாகன தணிக்கையில் ஈடுப்பட்டால் குற்றங்களும், விபத்துகளும் குறையும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • பள்ளிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஒவ்வொன்றாக நிறை வேற்றித் தரப்படும்.
    • அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை கடந்த ஆண்டை விட நிகழாண்டில் உயர்ந்துள்ளது.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் ரூ.10 லட்சம் மதிப்பில் அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு பூமி பூஜை செய்து, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, பணிகளை தொடங்கி வைத்தார். கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி, பர்கூர் மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர்கள், மாணவ சமுதாயத்தினர் வளர்ச்சிக்கும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை கடந்த ஆண்டை விட நிகழாண்டில் உயர்ந்துள்ளது.

    காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும் என பெற்றேர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் தலைமையாசிரியர் கடந்த வாரம் எனக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் உடனடியாக மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை மூலம் ரூ.10 லட்சத்தில் கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த

    பணி உத்தரவு வழங்கி, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் பழுதடைந்த வகுப்பறைகளை அகற்றி மாணவர்கள் படிப்பதற்கு நபார்டு திட்டத்தின் மூலம் கூடுதல் வகுப்பறை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பள்ளிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஒவ்வொன்றாக நிறை வேற்றித் தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து காவே ரிப்பட்டணம் பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ஒலி எழுப்பும் (சங்கு) எந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி கலெக்டர் சதீஸ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார், செயல் அலுவலர் செந்தில்குமார், தி.மு.க. பிரமுகர் கே.வி.எஸ். சீனிவாசன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    • சுகாதார நல மையக் கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
    • மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே பேரண்டபள்ளி துணை சுகாதார நிலையத்தில், பேரண்டபள்ளி, அத்திமுகம், தடிக்கல், கோட்டை உளிமங்கலம், தளி, வி.மாதேப்பள்ளி ஆகிய 6 பகுதிகளில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார நிலையம், செவிலியர் குடியிருப்பு மற்றும் சுகாதார நல மையக் கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார்.

    கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலை உரையாற்றினார். கிருஷ்ண கிரி எம்.பி. டாக்டர் செல்லகுமார், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்து விழாவில் பேசினர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

    தொடர்ந்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மேலும் இந்நிகழ்ச்சியில், பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், மருத்துவத்துறை துணை இயக்குனர் செல்வ விநாயகம், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், சிவகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் பி.எஸ்.சீனிவாசன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி. முருகன், செங்குட்டுவன், முன்னாள் எம்.பி. சுகவனம் மற்றும் துறை அலுவலர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட சுகாதார பிரிவு உதவி இயக்குனர் கோவிந்தன் வரவேற்றார்.

    முடிவில் சூளகிரி வட்டார மருத்துவ அலுவ லர் வெண்ணிலா நன்றி கூறினார்.

    • சூளகிரி போலீசார் நடத்திய சோதனையில் கோனேரிப்பள்ளி பகுதியை சேர்ந்த சந்திரப்பா (வயது 42), சுரேஷ் (30) ஆகியோர் குட்காவுடன் பிடிபட்டனர்.
    • அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி குட்கா கடத்திய பலர் பிடிபட்டனர்.

    சூளகிரி போலீசார் நடத்திய சோதனையில் கோனேரிப்பள்ளி பகுதியை சேர்ந்த சந்திரப்பா (வயது 42), சுரேஷ் (30) ஆகியோர் குட்காவுடன் பிடிபட்டனர். அவர்கள் போலீசார் கைது செய்தனர்.

    ஓசூர் சிப்காட் போலீசார் நடத்திய சோதனையில் ஜூஜூவாடியில் ரூ.1 மதிப்பிலான 153 கிலோ போதை பொருட்களுடன் மதுரை அன்புநகரை சேர்ந்த அசோக் (40) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே பகுதியில் கண்டவுடன் 2 மர்ம நபர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பிவிட்டனர். அந்த காரையும் பறிமுதல் செய்த போலீசார் அதிலிருந்த ரூ.75 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல தளி போலீசார் நடத்திய சோதனையில் யானைக்கால் சாலையில் 87 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி சென்னையை சேர்ந்த சரவணன் (42),திருவள்ளூரை சேர்ந்த அமிர்தலிங்கம்(38) ஆகியோரை போலீசார் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த 8-ந்தேதி முதல் ஏழுமலை மாயமாகி விட்டார்.
    • இது தொடர்பான புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள நொச்சிப்பட்டி சத்யா நகரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 52) கூலித்தொழிலாளி. கடந்த 8-ந்தேதி முதல் இவர் மாயமாகி விட்டார்.இது தொடர்பான புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகள் சத்யா (வயது 19) என்பவர் கடந்த 13-ந்தேதி முதல் காணாமல் போய் விட்டார். இது குறித்து ஹரிகிருஷ்ணன் தந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஓசூர் அரசம்பட்டியை சேர்ந்தவர் பிரசாத்.இவரது மகன் விஷ்ணுஆதக் (வயது 17). பள்ளி மாணவனான விஷ்ணுஆதிக் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.இதுகுறித்து பிரசாத் தந்த புகாரின்பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல ஓசூர் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் அனுஸ்ரீ (19).ஐவரும் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை. பல இடங்களில் விசாரித்து அவர் பற்றி எவ்வித கிடைக்காததால் ஓசூர் டவுன் போலீசில் சங்கர் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×