என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் காந்தி தகவல்"
- பள்ளிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஒவ்வொன்றாக நிறை வேற்றித் தரப்படும்.
- அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை கடந்த ஆண்டை விட நிகழாண்டில் உயர்ந்துள்ளது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் ரூ.10 லட்சம் மதிப்பில் அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு பூமி பூஜை செய்து, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, பணிகளை தொடங்கி வைத்தார். கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி, பர்கூர் மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர்கள், மாணவ சமுதாயத்தினர் வளர்ச்சிக்கும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை கடந்த ஆண்டை விட நிகழாண்டில் உயர்ந்துள்ளது.
காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும் என பெற்றேர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் தலைமையாசிரியர் கடந்த வாரம் எனக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் உடனடியாக மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை மூலம் ரூ.10 லட்சத்தில் கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த
பணி உத்தரவு வழங்கி, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் பழுதடைந்த வகுப்பறைகளை அகற்றி மாணவர்கள் படிப்பதற்கு நபார்டு திட்டத்தின் மூலம் கூடுதல் வகுப்பறை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பள்ளிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஒவ்வொன்றாக நிறை வேற்றித் தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து காவே ரிப்பட்டணம் பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ஒலி எழுப்பும் (சங்கு) எந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி கலெக்டர் சதீஸ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார், செயல் அலுவலர் செந்தில்குமார், தி.மு.க. பிரமுகர் கே.வி.எஸ். சீனிவாசன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.






