என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி பகுதியில்   வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட 4 பேர் மாயம்
    X

    கிருஷ்ணகிரி பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட 4 பேர் மாயம்

    • கடந்த 8-ந்தேதி முதல் ஏழுமலை மாயமாகி விட்டார்.
    • இது தொடர்பான புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள நொச்சிப்பட்டி சத்யா நகரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 52) கூலித்தொழிலாளி. கடந்த 8-ந்தேதி முதல் இவர் மாயமாகி விட்டார்.இது தொடர்பான புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகள் சத்யா (வயது 19) என்பவர் கடந்த 13-ந்தேதி முதல் காணாமல் போய் விட்டார். இது குறித்து ஹரிகிருஷ்ணன் தந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஓசூர் அரசம்பட்டியை சேர்ந்தவர் பிரசாத்.இவரது மகன் விஷ்ணுஆதக் (வயது 17). பள்ளி மாணவனான விஷ்ணுஆதிக் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.இதுகுறித்து பிரசாத் தந்த புகாரின்பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல ஓசூர் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் அனுஸ்ரீ (19).ஐவரும் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை. பல இடங்களில் விசாரித்து அவர் பற்றி எவ்வித கிடைக்காததால் ஓசூர் டவுன் போலீசில் சங்கர் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×