என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் தீவிர வாகன தணிக்கை"

    • வேப்பனப்பள்ளி போலீசார் நகரத்தின் மையத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்ததால் இப்பகுதியில் வாகன ஓட்டிகள் வேகமாக ஓட்டுவது குறைந்துள்ளது.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு என மூன்று மாநில எல்லைகள் உள்ளதால் இப்பகுதியில் இருசக்கர வாகன திருட்டு, அண்டை மாநிலங்களிலிருந்து கஞ்சா இறக்குமதி செய்தல், இளைஞர்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் உத்தரவின் பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் நகரத்தின் மையத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் சந்தேகத்திற்கு உரிய வகையில் வரும் நபர்களை சோதனை செய்து அவர்களின் ஆவணங்களை பரிசோதித்தனர். மேலும் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்ததால் இப்பகுதியில் வாகன ஓட்டிகள் வேகமாக ஓட்டுவது குறைந்துள்ளது.

    இதனால் இப்பகுதி பொதுமக்கள் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர். மேலும் இது போன்று அடிக்கடி வாகன தணிக்கையில் ஈடுப்பட்டால் குற்றங்களும், விபத்துகளும் குறையும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

    ×