என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற் சான்றிதழ் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • பயிற்சிக்கு பின் சான்றிதழ் பெற்று பயன்பெறலாம் என்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற் சான்றிதழ் பட்டமளிப்பு விழா நடந்தது.

    விழாவிற்கு முதல்வர் சுப்ரமணி தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற வர்கள், இந்தியன் ரெயில்வே, பி.எச்.இ.எல்., டி.ஆர்.டி.ஓ., உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் அல்லது அரசு போக்குவரத்து கழகம், ஆவின், மின்வார வாரிய நிறுவனங்களில் தொழில் பழகுநர் சட்டத்தின்படி ஒராண்டு பயிற்சி முடிக்க வேண்டும்.

    பயிற்சிக்கு பின் சான்றிதழ் பெற்று பயன்பெறலாம் என்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பர்கூர் மின்சார வாரிய உதவி பொறியாளர் செல்வம், மருத்துவர் நாகேஷ் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

    விழாவில், 2022-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு, தேசிய தொழிற்சான்றிதழ்களை வழங்கி தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு அளிக்கப்படும் வேலை வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    சிகரலப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எட்வர்டு ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இளநிலை பயிற்சி அலுவலர் கோவிந்தராஜ், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை மற்றும் பயிற்சி தொடர்பான அறிவுரைகள் வழங்கினார். பணியமர்த்தும் அலுவலர் சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.

    இவ்விழாவில் மாண வர்கள், இளநிலை பயிற்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கூடுத லாக பணம், நகை வரதட்சணையாக வாங்கிவர வேண்டும் என்று கிருஷ்ணவேணியை அவரது கணவரின் குடும்பத்தினர் சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.
    • மனம் உடைந்த கிருஷ்ணவேணி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் .

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள திம்மன ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது.

    இந்நிலையில் கூடுத லாக பணம், நகை வரதட்சணையாக வாங்கிவர வேண்டும் என்று கிருஷ்ணவேணியை அவரது கணவரின் குடும்பத்தினர் சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த கிருஷ்ணவேணி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் .

    இது குறித்து அவரது தாய் ராயக்கோட்டை போலீசில் புகார் தந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணவேணியின் கணவர் கோவிந்தராஜ் மற்றும் அவரது தாய் செல்வி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    திருமணமாகி 6 தற்கொலை செய்து கொண்டதால் தேன்கனிக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி.முரளியும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • சின்னமுனுசாமியை கடந்த 16-ந்தேதி முதல் காணவில்லை.
    • அதே பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் அவர் பிணமாகி மிதந்தார்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் அருகேயுள்ள பலகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் (சின்னமுனுசாமி வயது 72).

    இவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சின்னமுனுசாமியை கடந்த 16-ந்தேதி முதல் காணவில்லை. அவரை பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் அவர் பிணமாகி மிதந்தார்.

    ஏரியில் அவர் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பாகலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பெரியாரின் 144 - வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    காவேரிப்பட்டிணம், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் பையூரில் தந்தை பெரியாரின் 144 - வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அதிமுக ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான பையூர் ரவி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினருமான கே.அசோக்குமார் அவர்கள் கலந்து கொண்டு பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே. பி.எம். சதீஷ்குமார், எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவர் ஆறுமுகம், கூட்டுறவு சங்க இயக்குனர் லட்சுமணன்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவுன்சிலர் சங்கீதா கேசவன், மாவட்ட மாணவர் அணி செயலாளார் மோகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஜெயக்குமார், ஒன்றிய அவை தலைவர் சுந்தர், திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஹரிவராசன், மாவட்ட செயலாளர் மாணிக்கம் ,பொதுக்குழு உறுப்பினர் திராவிட மணி, முன்னாள் மாவட்ட தலைவர் மதி மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 7 பவுன் நகை , ரூ.9,000 பணம் திருடு போயிருந்தது.
    • நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி. மத்தூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் முண்டேப்பள்ளியை சேர்ந்தவர் கந்தம்மாள் (வயது 78). இவர் கடந்த ஜூலை மாதம் தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு வெளியூர் சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 7 பவுன் நகை , ரூ.9,000 பணம் திருடு போயிருந்தது.

    இதுகுறித்து மத்தூர் போலீசில் கந்தம்மாள் புகார் செய்தார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யிடம் கந்தம்மாள் முறையிட்டார். இதைய டுத்து அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி. மத்தூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பே ரில் மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் தலைமை தாங்கினார்.
    • பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், நேற்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் தலைமை தாங்கினார்.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் பரிதா நவாப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    இந்த விழாவில், நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் மகேந்திரனுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்களை போற்றும் வகையில் பள்ளி மாணவிகள் கவிதை, கட்டுரைகள், பாடல்கள் வாசித்தனர். பின்னர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரி யர்களை கவுரவிக்கும் வகையில் 99 ஆசிரியர்களுக்கும், 10 பணியாளர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டன.

    இந்த விழாவில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முதல்வர்(பொறுப்பு) மோகன், பேராசிரியர் அன்புமணி, கவுன்சிலர்கள் சீனிவாசன், பாலாஜி, பரந்தாமன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அனைத்து துறைத் தலைவர்களும், உதவி பேராசிரியர்களும், மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். தன்னுடைய தலைமையுரையில், பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற கொள்கைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கு வித்தாக விளங்கினார். தமிழ்நாடு என்ற பெயரை சட்டபூர்வமாக அறிவித்தார் .தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கைக்குச் சட்டம் இயற்றினார் என்று பேசினார்.

    கல்லூரியின் பொருளாதாரப் பேராசிரியரும், நூலகருமான தனசீலன் தன்னுடைய சிறப்புஉரையில் அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றினை மாணவ மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார்.

    கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் சுரேஷ் குமார் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழாவின் சிறப்பு உரையில் மாணவ ,மாணவியர்கள் புத்தியைத் தீட்ட வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணப்பது போல மற்றவர்களையும் மதிக்க வேண்டும். கொள்கைகளை பின்பற்ற வேண்டும். துன்பம் உற்ற காலத்தில் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் எனும் பேரறிஞர் அண்ணாவின் இலக்கிய சிந்தனைகளை மாணவர்களுக்கு கூறினார்.

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் அனைத்து துறைத் தலைவர்களும், உதவி பேராசிரியர்களும், மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டனர்.

    • 1240 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்படுகிறது.
    • வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாளை (18ம் தேதி) மாநிலம் தழுவிய மாபெரும் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி செலுத்துதத் முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1240 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்படுகிறது. இம்மாவட்டத்தில் இது வரை கொரோன தடுப்பூசி செலுத்திக் கொள்ளா தவர்கள், இரண்டாவது தவணை செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகள், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் என பல்வேறு இடங்களில் நடத்தப்படவுள்ளது.

    இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்களும் மற்றும் கல்வித்துறை பணி யாளர்களுக்கும் முன்னு ரிமை அளிக்கப்படுகிறது.

    மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், முதல் தவணை கோவேக்சின் செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கொரோனா நோயினால் பாதிக்கப்படையவில்லை எனவும், அவ்வாறு நோய் தொற்று உறுதியானாலும் உயிர் சேதம் மற்றும் தீவிர நோய் தொற்றும் ஏதும் ஏற்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

    இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள், தங்கள் வீட்டையும், சமுதாயத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். மேலும், முன்களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 18 முதல் 59 வயதிற்குபட்ட நபர்கள் 182 நாட்கள் கழித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசியினை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவ முகாம்களில் வருகிற 30-ம் தேதி வரை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம். மேலும், வருகிற 30-ம் தேதிக்கு பின் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாது. இந்த அரியவாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார். 

    • அரசு மருத்துவக் கல்லூரியில் மனநல நல்லாதரவு மன்றம் துவங்கப்பட்டது.
    • மாணவர்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள், பணி யாளர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் மனநல நல்லாதரவு மன்றம் துவங்கப்பட்டது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் டாக்டர்.சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் 'மனம்' என்றழைக்கப்படும் மனநல நல்லாதரவு மன்றம் துவக்கப்பட்டது. தேசிய குற்றவியல் ஆவணப்படி ஆண்டுதோறும், 8.2 சதவீத மாணவர்கள் தற்கொலையால் இறக்கின்றனர். இதில், கடந்த 2020-ல், 7.4 சதவீத (930 பேர்) மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.மாணவர்களின் பதற்றத்தை போக்கி, எதிர்கால சவால்களை கையாளும் விதத்தில் மனநல நல்லாதரவு மன்றம் துவக்கப்பட்டுள்ளது.

    கல்லூரி முதல்வர் சங்கீதா தலைவராகவும், துணை முதல்வர் சாத்விகா துணை தலைவராகவும், இணை போராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் துர்கேஷ், சேனாதித்தா, ஸ்டேன்லிபால், ரேஷ்மா, ஷாலினி, காஷித்ஜெயின் உள்ளிட்டோர் மனத்திட்ட தூதுவர்களாகவும் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் மூலம் கல்லூரியின் இதர ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள், பணி யாளர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள், 63797-93630 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளையும் பெறலாம்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கல்லூரியின் முதல்வர் டாக்டர்சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • பள்ளி மாணவர்களுக்கு இடையேயான வருடாந்திர விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • மாணவ மாண வியருக்கு பதக்கம் மற்றும் பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி மற்றும் ஒரு தனியார் நிறுவனம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையேயான வருடாந்திர விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில், போட்டிகளை, மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் தொடங்கி வைத்தார்.

    இதில், ஓசூர் தாலுக்காவை சேர்ந்த 22 அரசு பள்ளிகளிலிருந்து 490 மாணவ மாணவியர் கலந்து கொண்டு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாண வியருக்கு பதக்கம் மற்றும் பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக வேலூர் தொன்போஸ்கோ பள்ளி முதல்வர் எட்வர்ட் மைக்கேல், தூய நெஞ்சக் கல்லூரி துணை முதல்வர் சாம்சன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் பெர்னார்ட் கலந்து கொண்டனர்.

    • மாணவர் சேர்க்கை வருகிற 20 மற்றும் 21--ம் தேதிகளில் நடைபெறுகிறது.
    • அனைத்து சான்றிதழ்களும் மூன்று நகல்களை கொண்டுவர வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் இறுதிகட்ட மாணவர் சேர்க்கை வருகிற 20 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

    இது குறித்து கல்லூரியின் முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இறுதிகட்ட கலந்தாய்வு வருகிற 20 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. அதன்படி, வருகிற 20-ம் தேதி காலை 10.30 மணியளவில் அறிவியல் பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கையும், 21-ம் தேதி காலை 10.30 மணியளவில் கலைப்பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கையும் நடை பெறும். விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

    மேலும், விண்ணப்பிக்காத மாணவர்கள் கல்லூரிக்கு நேரில் வந்து விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து அன்றே பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கை நாளில் கலந்துகொள்ளலாம். கலந்தாய்வின் போது, மாற்றுச்சான்றிதழ் (அசல்), மதிப்பெண் பட்டியல் (10, 11, 12-ம் வகுப்பு, அசல் சான்றிதழ்கள்), சாதிச்சான்றிதழ் (அசல்), வருமானச் சான்றிதழ் (அசல்), சிறப்பு பிரிவினரக்கான சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -4, ஆதார் அட்டை (நகல்), வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், சேர்க்கைக் கட்டணம் கலைப்பிரிவிற்கு ரூ.2485, அறிவியல் பிரிவிற்கு ரூ.2505 ஆகியவற்றுடன், அனைத்து சான்றிதழ்களும் மூன்று நகல்களை கொண்டுவர வேண்டும். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கல்லூரி முதல்வர் அனுராதா தெரிவித்துள்ளார்.

    • வரட்டம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக இருவரும் கீழே விழுந்தார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

    காவேரிப்பட்டணம்

    காவேரிப்பட்டணத்தில் வசித்து வந்தவர் மாதேஷ் (வயது 41). இவர் டூ வீலர் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ளனர். இவரும் இவரது நண்பர் சுரேஷ் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊர் திரும்பினர்.

    வரட்டம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு பின்னர் அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாதேஷ் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

    ×