என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் நடந்த ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி
- விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் தலைமை தாங்கினார்.
- பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், நேற்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் தலைமை தாங்கினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் பரிதா நவாப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில், நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் மகேந்திரனுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்களை போற்றும் வகையில் பள்ளி மாணவிகள் கவிதை, கட்டுரைகள், பாடல்கள் வாசித்தனர். பின்னர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரி யர்களை கவுரவிக்கும் வகையில் 99 ஆசிரியர்களுக்கும், 10 பணியாளர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டன.
இந்த விழாவில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முதல்வர்(பொறுப்பு) மோகன், பேராசிரியர் அன்புமணி, கவுன்சிலர்கள் சீனிவாசன், பாலாஜி, பரந்தாமன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






