என் மலர்
உள்ளூர் செய்திகள்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவர்-மாமியார் அதிரடி கைது
- கூடுத லாக பணம், நகை வரதட்சணையாக வாங்கிவர வேண்டும் என்று கிருஷ்ணவேணியை அவரது கணவரின் குடும்பத்தினர் சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.
- மனம் உடைந்த கிருஷ்ணவேணி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் .
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள திம்மன ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது.
இந்நிலையில் கூடுத லாக பணம், நகை வரதட்சணையாக வாங்கிவர வேண்டும் என்று கிருஷ்ணவேணியை அவரது கணவரின் குடும்பத்தினர் சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த கிருஷ்ணவேணி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் .
இது குறித்து அவரது தாய் ராயக்கோட்டை போலீசில் புகார் தந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணவேணியின் கணவர் கோவிந்தராஜ் மற்றும் அவரது தாய் செல்வி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
திருமணமாகி 6 தற்கொலை செய்து கொண்டதால் தேன்கனிக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி.முரளியும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story






